மற்ற மூவரும் சிரித்தார்கள்.
🌼🌸❀✿🌷
நேரம் இறக்கை கட்டிக் கொண்டு பறந்தது... அலுவலகத்தில் இருந்து திரும்பிய ரமேஷும், நிரஞ்சனும் குடும்பத்தினருடன் வந்து கலந்துக் கொண்டார்கள். ரமேஷின் கலகலப்பான பேச்சு நரேந்திரனை மிகவும் கவர்ந்தது.
“இது மாதிரி நான் மனம் விட்டு சிரிச்சே ரொம்ப நாள் ஆச்சு ரமேஷ்!”
“பேசுறதுக்கு கொஞ்சமாவது நேரம் ஒதுக்கினால் தானே சிரிக்க முடியும்? ரஞ்சன், உமா இது மாதிரி புலம்ப ஆரம்பிக்குறதுக்கு முன்னாடி நீயா உன்னோட லைஃப்ஸ்டைலை மாத்திக்கோ... அதான் நல்லது,” என்றாள் கற்பகம்.
சமையலறையின் அருகே கையில் குழந்தையுடன், பவித்ரா மற்றும் பாரதியுடன் பேசிக் கொண்டிருந்த மனைவியை ஒரு பார்வை பார்த்து விட்டு,
“சரிம்மா,” என்றான் நிரஞ்சன்.
“இனிமேல் நான் பேசலைன்னு கவலை உனக்கில்லை கற்பகம்... நான் தான் ரிடையராக போறேனே,” என நரேந்திரன் சொல்லவும்,
“என்ன சார் சொல்றீங்க?” என்றான் ரமேஷ் ஆச்சர்யமாக.
“ஆமா ரமேஷ், என் பொறுப்பை எல்லாம் விவேக்குக்கும், நிரஞ்சனுக்கும் கொடுத்துட்டு, நான் இனி ரெஸ்ட் எடுக்க போறேன்... அவங்க இரண்டு பேரால் கவனிக்க முடியாத பொறுப்பை கவனிக்க, அனுபவம் இருக்கவங்களா பார்த்து செலக்ட் செய்டு ரெக்ரூட் செய்ய சொல்லி இருக்கேன்...”
“ம்ம்ம்... புரியுது சார்...”