“என்ன அண்ணி நீங்க, நீங்க என்னோட லெக்சரரா மட்டும் இருந்த போதே எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்... அண்ணி ஆன அப்புறம் சும்மா விட்டுருவோமா? அது என் அண்ணனாகவே இருந்தாலும் கூட, இதெல்லாம் ஜுஜுபி...” என்றாள் மது!
“பயங்கரமான டிக்லரேஷன் எல்லாம் செய்றீயே மது! இனிமேல் பாரதியோட கிட்ட பேசும் போது நாம கவனமா தான் பேசனும் உமா... ஆனால் காலேஜ்ல் மது சொன்ன மாதிரியான நியூஸ் எல்லாம் கூட பரப்புறாங்களா?” என வினவினாள் பவித்ரா!
காலேஜில் பரவி இருக்கும் விவேக் பாரதி பற்றிய கதையை தான் பவித்ரா குறிப்பிடுகிறாள் என்பதை புரிந்துக் கொண்டு,
“நான் முழு ஸ்டோரி சொல்லலையே மேம்... அன்னைக்கு நான் சொன்னது காலேஜ்ல சுத்திட்டு இருக்க அண்ணா அண்ணியோட லவ் ஸ்டோரியில் வர சின்ன பார்ட் தான்,“ என்றாள் மது!
“என்னது?” என்றாள் பாரதி அதிர்ச்சியாக.
“ஆமா அண்ணி! அண்ணாக்கு உங்களை பார்த்த உடனே பிடிச்சிடுச்சாம். அதனால் தான் அப்படி தனியா மீட்டிங் வைக்க அவருடைய ஃப்ரென்ட் கிட்ட ஹெல்ப் கேட்டாராம்... அவரும் அண்ணனுக்காக தான் உங்க கிட்ட அப்படி எதை எல்லாமோ பேசினாராம்... அதுக்கு அப்புறம் தான் உங்களுக்குள்...”
மது பேச்சை முடிக்க விடாமல்,
“கஷ்டமே! இதெல்லாம் என்ன புதுசா?” என்றாள் பாரதி அதிர்ச்சியுடன்!
“நம்ம காலேஜில் படிக்குற யாரவது பிற்காலத்தில் இத வச்சு சினிமா எடுத்தா கூட அதிசயம் இல்லை... அந்த அளவுக்கு இந்த கதை பாப்புலர்,” என்றாள் மது புன்னகையோடு.
“இப்படி எல்லாம் வேற என் மானத்தை வாங்கிட்டு இருக்காங்களா?” என பாரதி அங்கலாயிக்க,