(Reading time: 7 - 13 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

ஒருவேளை சரியா போகலைனா என்ன ஆகும்?”

  

“ம்ம்ம்... ரமேஷ் மேல அவ்வளவுக்கு நம்பிக்கை இல்லையா?”

  

நம்பிக்கை இல்லாம இல்லை... அசட்டு தைரியத்தை விட விவேகமா செயல் படுறது தான் சரி... பவி எப்போதும் அந்த கேட்டகரி தான்... அதனால் தான் அண்ணாவுக்கு நகை எல்லாம் கொடுத்து உதவாம தடை போட்டு வச்சிருந்தா... இன்னைக்கு தங்கம் விக்குற விலையில திரும்ப வாங்குறது எல்லாம் ஈஸியா நடக்குற விஷயமா? நானும் பவித்ராக்கு தான் சப்போர்ட் செய்வேன்... ஆனால் நம்மால முடியும் எனும் போது பவிக்கு ஹெல்ப் செய்யாம இருந்தா எப்படி? நாம நேரடியா உதவி செய்திருந்தா அவ ஏதாவது நெகட்டிவா சொல்வா... அண்ணாக்கும் ஏதோ நாம அவங்க செஞ்ச உதவிக்கு கைமாறா செய்த மாதிரி தான் இருக்கும்... அண்ணா நிஜமாவே ரொம்ப திறமையானவர்...”

  

அது எனக்கும் தெரியும் ரதி... நீ கொடுத்த அந்த லோன் லெட்டர் விஷயம் எனக்கு தானே தெரியும், ஆனால் அப்பாவும், அண்ணனும் கூட ரமேஷை புகழ தானே செய்தாங்க... ஆனால் அது என்னவோ எனக்கு நீ சொன்ன பவித்ரா விஷயம் மட்டும் முழுசா புரிய மாட்டேங்குது... அது போகட்டும், ரதி ஒரு விஷயத்துல மட்டும் மனசை தெளிவாக்கி வச்சிருக்கேன்... உன்னை இனிமேல் ஹர்ட் செய்றது போல எதுவும் செய்ய மாட்டேன்... அன்னைக்கு எல்லோர் முன்னாடியும் அப்படி கேவலமா நடந்துக் கிட்டதுக்கு சாரிடா...”

  

சொல்லிவிட்டு விவேக் மீண்டும் பாரதியின் இடதுக் கன்னம் நோக்கி குனியவும், பாரதி தன் கரம் கொண்டு அவனின் முகத்தை தடுத்தாள்.

  

நீங்க நிஜமாவே சாரி தான் கேட்குறீங்களா?”

  

இதுல என்ன உனக்கு சந்தேகம்?”

  

அதை வார்த்தையில சொன்னாலே போதுமே...”

  

ஹி ஹி... மத்தவங்க கிட்ட தான் சாரியை வார்த்தையில சொல்லனும் ரதி... உன் கிட்ட எல்லாம் அக்ஷன் தான்...”

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.