தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 82 - பிந்து வினோத்
82. எந்தன் உயிரே... எந்தன் உயிரே...
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
பாரதி கேள்வியோடு பார்த்துக் கொண்டே இருக்க, “நான் அன்னைக்கு அறைஞ்சது வலிச்சுதா?” என வினவினான் விவேக்!
“ம்ம்ம்... இல்லையே! ரொம்ப இதமா இருந்தது,” என்றாள் பாரதி, ‘இது தானா!’ என்ற தோரணையில்!
“சாரி ரதி... எனக்கே இரண்டு நாள் கை வலிச்சுது! உனக்கு எவ்வளவு வலிச்சிருக்கும்?”
சொல்லிவிட்டு குனிந்து பாரதியின் இடது கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டான் விவேக்.
“அது நடந்து எவ்வளோ நாள் ஆச்சு! இப்போ எதுக்கு அதைப் பத்தின பேச்சு???”
“இல்ல ரதி, மனைவியை மட்டும் இல்ல, எந்த ஒரு பெண்ணையும் கை நீட்டி அடிப்பவன் மனுஷனே இல்லை...”
“என்னை கோபப் படுத்த தானே செய்தீங்க, நீங்க ஒன்னும் வேணும்னு செய்யலையே... அதை எல்லாம் மறந்திருங்க ஆனந்த்...”
“ப்ச்... நான் அடிச்சதே உனக்கு வலிச்சிருக்கும், அதுவும் ஹால்ல எல்லோருக்கும் முன்னாடி அரை வாங்கினது எவ்வளவு கொடுமையா இருந்திருக்கும்...”
“பரவாயில்லை ஆனந்த், அதை விடுங்க...”
“ப்ச்... அதெல்லாம் செஞ்சும் என்ன பிரயோஜனம்? இந்த ரதி மேடம் தான் அசையவே இல்லையே!!! நீ சண்டை போடுவ, கோபப் படுவன்னு நான் நினைச்சா, நீ பொறுமையா அன்னைக்கு நைட்டே என்ன விஷயம்னு கேட்குற...”
விவேக் சட்டென்று கண்களில் மின்னிய ரசனையுடன் அதை சொன்ன விதத்தில் பாரதியின் உதட்டிலும் புன்னகை உதயமானது!