“நான் என்ன செய்ய, நீங்க எதையாவது சரியா செஞ்சா தானே? எனக்கு கோபம் வர என்னை ஹர்ட் செய்தா போதாதே.. அதுவும் நீங்க ஹர்ட் செய்தா உடனே எனக்கு எப்படி கோபம் வரும்...”
“ம்ம்ம்... வேற என்ன செய்யனும் மஹாராணி...?”
“ரொம்ப சிம்பிள்... நீங்க உங்களை பாதிக்குற விஷயம் ஏதாவது செய்திருக்கனும்... தண்ணி அடிக்குறது, சிகரெட் பிடிக்குறது, பொண்ணுங்களோட சுத்துறது... மத்தப்படி, பெரியவங்களுக்கு மரியாதை கொடுக்காம நடந்துக்குறது எக்ஸட்ரா எக்ஸட்ரா...”
“ஓஹோ... ரதி செல்லத்தோட ஹெல்ப் இல்லாம இனிமேல் எதுவுமே செய்றதில்லை... ஆனால் நீ சொன்ன எதையுமே என்னால செய்ய முடியாதே... அதுவும் எங்க வீட்டுல சான்சே இல்லை...”
“நிஜமாவா? நம்ப தான் கஷ்டமா இருக்கு...”
“இந்த கலியுகத்தில நல்லவனா இருந்தா இப்படி தான் இருக்கும் போலருக்கு...”
“நீங்க நல்லவர்னு நான் சொல்லனும் ஆனந்த்...”
“க்கும்... நான் நல்லவனோ கெட்டவனோ, சாரிடா... உன்னை அடிச்சது ரொம்ப பெரிய தப்பு...” என்று சொன்ன விவேக், மீண்டும் குனிந்து பாரதியின் அதே இடதுக் கன்னத்தில் முத்தமிட்டான்!
“அதை எல்லாம் மறந்திருங்க விவேக்... சொல்ல மறந்துட்டேனே, ரமேஷ் அண்ணாக்கு அந்த மார்க்கெட்டிங் கம்பெனிக்கு உதவினதுக்கு தேங்க்ஸ்...”
“நீ ரமேஷ் விஷயத்தை என் கிட்ட நேராவே சொல்லி இருக்கலாமே, அதுக்கு எதுக்கு அந்த லெட்டர் எல்லாம்?”