(Reading time: 11 - 22 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

அடக்கி வைச்சிருக்கான், நம்ம மேல அவனுக்கு ரொம்ப காதல் போல நமக்காக உசுரை விடுவேன்னு சொன்னது பொய்யில்லை போல இருக்கு, எது எப்படியோ இந்த பிரச்சனை முடிஞ்சதும் முதல் வேலையா ஹனிமூன் போகனும், அப்பதான் அகத்தியன் சந்தோஷப்படுவான்” என மனதில் நினைத்து பூரித்துக் கொண்டிருந்தாள்.

   

அகத்தியனோ அந்த இரு பேய்களையும் தூக்கி போட்டு பந்தாடிக் கொண்டிருக்க அதைக் கண்ட நாச்சியாவிற்கு வியப்பாக இருந்தது

   

”இவனுக்குள்ள இவ்வளவு பலமா, இவ்ளோ வீரமா சண்டை போடறானே இத்தனை நாளும் நம்மகிட்ட இதை மறைச்சிருக்கான் ராஸ்கல், இருக்கட்டும் நமக்காக ஒருத்தன் சண்டை போடறதுல கூட ஒரு தனி சந்தோஷம் இருக்கு” என அவள் எண்ணிக் கொண்டிருக்க இங்கு அகத்தியனின் ஆவி சங்கமேஸ்வரனை பிடித்து இறுக்கிக் கொண்டிருக்க கார்கோடகன் காப்பாற்ற வர அவனையும் பிடித்து வைக்க சங்கமேஸ்வரன்

   

”அகத்தியா என்னை விட்டுடு என்னை விட்டுடு”

   

”முடியாது” என கர்ஜித்தான் அந்த குரலைக் கேட்டு பரவசமானாள் நாச்சியா

   

”அடடா வீரம் வந்ததும் குரலும் மாறிடுச்சே என் ஆளுக்கு என்ன கம்பீரமான குரல்வளம் சூப்பர் சூப்பர்” என அவள் ஒரு பக்கம் குதூகலமாக இருக்க கார்கோடகனோ

   

”என்னை விடு நான் போயிடறேன்” என சொல்ல அதற்கு அகத்தியனோ

   

”உன்னை விடமுடியாது 100 பேரை கொன்ன பாவி நீ, உனக்கு சரியான தண்டனையை நான் இல்லை அந்த 100 பேரே தருவாங்க” என சொல்ல கார்கோடகன் வியந்தான்

   

”என்னடா முழிக்கற 100 பேர் எப்படிவருவாங்கன்னு பார்க்கறியா இப்ப பாரு அவங்களை வரவழைக்கிறேன்” என சொல்லி அவர்களை அழைக்க அடுத்த நொடி கார்மெண்ட்ஸில் மறைந்த 100 ஆவிகளும் அகத்தியனின் குரலைக் கேட்டு இங்கு வந்து நின்றார்கள். ஒரே நேரத்தில் 100 ஆவிகளைக் கண்ட நாச்சியாவிற்கு மயக்கமே வந்தது அவள் மயங்கி சரிந்தாள்.

   

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.