(Reading time: 11 - 22 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

அகத்தியனோ வந்திருந்த 100 ஆவிகளிடம்

   

”உங்களோட இறப்புக்கு இந்த கார்கோடகன்தான் காரணம், இந்தாங்க இவனுக்கான தண்டனையை நீங்களே கொடுங்க” என சொல்லி கார்கோடகனின் ஆவியை விட அவ்வளவுதான் 100 ஆவிகளும் சேர்ந்து கார்கோடகனின் ஆவியை பிடித்துக் கொண்டது, சில நொடிகள்தான் 100 ஆவிகளின் ஆத்மா சாந்தியானதோடு அவைகள் மறைந்தும் போனது, நிராசையோடு இறந்து ஆவியாக வந்த கார்கோடகன் கூட ஆவிகளால் மீண்டும் கொல்லப்பட்டதால் அவனும் மறைந்தே போனான், இம்முறை அவனுக்கு சாந்தியும் கிடைக்கவில்லை, ஆவியாகவும் முடியவில்லை. அவன் செய்த தவறுக்காக மறுபிறவி எடுத்தான், அதுவும் ஒரு பாம்பாக அந்த வரத்தை அந்த 100 ஆவிகளே தந்துவிட்டு சென்றார்கள். இனி கார்கோடகன் பாம்பாக வாழ்ந்து தன் வாழ்க்கையை முடித்து சாந்தியாக வேண்டும், அதுவரை அவனை கழுகோ பருந்தோ ஏன் மனிதர்கள் கூட விட்டால்தானே யாராவது அவனை அடித்து கொன்றால் கூட அவ்வளவுதான் இனி எத்தனை முறை அவன் பிறவி எடுத்தாலும் மனிதனாக அல்ல அற்ப புழுவாகவோ எதற்கும் பயன்படாத ஜந்துவாகதான் பிறப்பான் இது 100 ஆவிகளின் சாபம்.

   

இனி இருப்பது சங்கமேஸ்வரன்தான் அவனை இறுக்கமாக பிடித்தான் அகத்தியன். 

   

”அகத்தியா வேணாம் நான் உன்னை நல்லபடியாதான் வளர்த்தேன், நீ என்னோட பேரன், உன் விசயத்தில நான் எந்த குறையும் வைச்சதில்லை, நான் நாச்சியாவை கொல்ல வரலை எனக்கு தேவை அந்த உயில் பத்திரம், அதை நான் அழிச்சிட்டா அதோட எனக்கு சாந்தி கிடைச்சிடும், எனக்கு மறுபிறவி கூட கிடையாது, என்னை நம்பு ஆவியான பின்னாடி கூட என்னை நீ நம்பலைன்னா எப்படி சொல்லு” என சொல்ல அகத்தியன் அவரை விட்டான். சட்டென அவன் கையில் ஒரு பத்திரம் வந்தது அதை அப்படியே சங்கமேஸ்வரனிடம் நீட்ட ஆர்வமாக அதை வாங்கிப் பிரித்துப் பார்த்தார். 

   

ஆண்டாள் நாச்சியார் மக்களுக்காக எழுதி வைத்த உயில் பத்திரம் அது, அதைக் கண்டதும் பரவசமான சங்கமேஸ்வரன் அதை கிழித்து தன் சக்தியால் எரிக்கவும் செய்தான் அது நன்றாக எரிந்து சாம்பல் ஆன பின்புதான் சங்கமேஸ்வரனுக்கு நிம்மதியே வந்தது. தானாக அந்த உடலை விட்டு சங்கமேஸ்வரனின் ஆத்மா விலகியது.

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.