(Reading time: 11 - 22 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

   

பேய்கள் இல்லாத கமிஷனரின் உடல் அநாதரவாக தரையில் கிடக்க அகத்தியனோ மயங்கிக்கிடந்த நாச்சியாவை பார்த்தான். அவள் இன்னும் மயக்கத்தில் இருக்க அவளின் மயக்கத்தை போக்கினான். கண் விழித்த நாச்சியா சுற்றி முற்றி பார்த்துவிட்டு பயத்தில் அகத்தியனை அணைக்க வந்தாள், அப்போதுதான் தெரிந்தது அது மனிதன் அல்ல ஆவி என்று அந்த பயத்தில் அவள் அலறிக் கொண்டு ஓட அந்நேரம் உண்மையான அகத்தியன் நாச்சியாவின் இரு ஆவிகளுடன் இவ்விடம் வந்து சேர்ந்தான். 

   

ஓடி வந்த நாச்சியாவை அள்ளிக் கொண்டான் அகத்தியன்

   

அவனைக் கண்டு அலறினாள்

   

”அய்யோ பேய் பேய் காப்பாத்துங்க காப்பாத்துங்க”

   

”அடிப்பாவி தாலி கட்டின புருஷனைப் பார்த்து பேய்ங்கறியே இது உனக்கே நியாயமா படுதா” என சொன்னதும் நாச்சியாவின் பயம் விலகி அவனைப் பார்த்து அசடு வழிந்தாள்

   

”வழியாத” என சொல்ல அவளோ அவனின் கன்னத்தில் முத்தம் வைக்க இப்போது அவன் அசடு வழிந்தான், இருவரும் இப்படி அசடு வழிய, அகத்தியன் ஆவியிடம் ஆண்டாள் நாச்சியாவும் அவனது மனைவி நாச்சியாவும் வந்து சேர்ந்தார்கள், இருவரைக் கண்டதும் கண்கள் கலங்கியது அகத்தியனின் ஆவி. பதிலுக்கு அந்த பேய்களின் கண்களும் கலங்கிவிட்டது.

   

இதைப் பார்த்த அகத்தியனும் நாச்சியாவும் பரிதாபப்பட்டார்கள்

   

”எது எப்படியோ நல்லதே நடந்து முடிஞ்சிடுச்சி, கார்கோடகனை அந்த 100 ஆவிகளே சேர்ந்து அழிச்சிடுச்சி அதோட சங்கமேஸ்வரனுக்கு தேவையான உயில் பத்திரம் கிடைச்சதும் அதை அவர் எரிச்சிட்டு போயிட்டாரு இதோட எல்லா பிரச்சனைகளும் முடிஞ்சிடுச்சி” என அகத்தியனின் ஆவி சொல்ல அதற்கு நாச்சியாவின் ஆவிகள் மனம் மகிழ்ந்தார்கள்

   

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.