(Reading time: 11 - 22 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

முடிஞ்சிடுச்சி இனி நமக்கு இங்கென்ன வேலை நாம போகலாம் நாச்சியா” என சொல்ல நாச்சியாவும் புன்னகை புரிந்தாள், அதைக்கண்டபடியே அகத்தியனும் புன்னகை பூக்க இவ்விருவரின் ஆவியும் மறைந்து அவர்களின் ஆத்மாவும் சாந்தியடைந்தது.

   

அதற்குள் பொழுது விடிந்துவிட்டது.

   

அகத்தியனும் நாச்சியாவும் கமிஷனரை உலுக்கி எழுப்ப அவரோ மெல்ல எழுந்து அமர்ந்தார்

   

”நான் எப்படி இங்க வந்தேன் ஆமா நீங்க இங்க என்ன செய்றீங்க, நாம எங்க இருக்கோம்” என உளற அகத்தியனோ

   

”சார் நீங்க கொடுத்த கேஸ் முடிஞ்சிடுச்சி இனி நாங்க ஹனிமூன் போகலாமா“

   

”எந்த கேஸ்”

   

”அதான் சார் நீங்க தந்தீங்களே அம்பேத்கர் நகர் கேஸ் அந்த கார்மெண்ட்ஸ் தீ விபத்து 100 பேர் மரணம்”

   

”என்ன உளர்ற நான் எந்த கேசும் உங்களுக்கு தரலை“

   

”அப்ப கல்யாணத்தன்னிக்கு நீங்க எங்களுக்கு தந்தது என்ன“

   

”நான் உங்களுக்கு தந்தது சுவிஸ்க்கு ஹனிமூன் டிரிப்புக்கான ரெண்டு டிக்கெட்டுகள்தான் ஆமா இன்னுமா நீங்க ஹனிமூன் போகலை, அங்க போகாம இங்க என்ன செய்றீங்க என்னையும் கூட வைச்சிக்கிட்டு என்ன செய்றீங்க” என கோபப்பட நாச்சியாவும் அகத்தியனும் மாறி மாறி பார்த்து அடுத்த நொடியே கலகலவெனச் சிரித்தார்கள்.

   

கமிஷனரோ அங்கிருந்து வெளியேறி நின்று எங்கு இருக்கிறோம் என பார்த்து மெய் சிலிர்த்தார்

   

”ஓ இது நம்ம தாத்தா வீடு இங்க எப்படி வந்தோம்” என யோசித்தபடியே அவர் அங்கிருந்து செல்ல பின்னாலேயே இவ்விருவரும் சென்றார்கள். வண்டியிருந்த இடத்திற்கு வந்ததும் 

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.