தொடர்கதை - தூறல் போல காதல் தீண்ட - 06 - சசிரேகா
அர்ஜூன் வெளியே வந்து காரில் ஏறியவன் நந்தினியிடம் பேசிக்கொண்டே ஹாஸ்டலை நோக்கி சென்றுக்கொண்டிருந்தான்.
”நந்தினி”
”அண்ணா”
”ஒரு விசயம் சொல்லு உனக்கு ரிஷிஅண்ணாவை பிடிச்சிருக்கா”
என கேட்க அவள் மௌனமானாள்
”இங்க பாரும்மா நான் உன்னை கஷ்டப்படுத்தறதுக்காக கேட்கல அண்ணாவோட மனசு என்னன்னு எனக்குத் தெரியும் அவருக்கும் உன்னை பிடிச்சிருக்கு ஆனா சொல்ல மாட்டேங்கறாரு”
“இல்லைண்ணா அவர் அந்த 3 பொண்ணுங்களுக்கு பயந்துதான் என்னை பிடிச்சிருக்குன்னு சொல்றாரு”
“அவர் சரியான லூசும்மா தானும் குழம்பி அடுத்தவங்களையும் குழப்பிடுவாரு. நான்தான் முதல் நாள்ல இருந்து பார்க்கறேனே உன் மேல அவருக்கு நிறைய அக்கறையிருக்கு இப்ப கூட பாரு உன்னை பார்த்ததும் உன்னை கட்டிப்பிடிச்சிக்கிட்டார்ல”
“ஆனா அதுல காதல் இல்லையே” என நந்தினி வருத்தமாகச் சொல்ல அதற்கு அர்ஜூன்
“ம் புரியுது அண்ணா மனசுல உன் மேல லவ்வாதான் இருக்காரு ஆனா சொல்ல மாட்டேங்கறாரு”
“நானும் கேட்டேன் அவர் இல்லைன்னு சொன்னாரு. என்னை அந்த வீட்டுக்கு கூப்பிட்டது கூட அந்த பொண்ணுங்களுக்காகதான் அவருக்காக இல்லை நான் வரலைன்னாலும் தாத்தா யாரை சொல்றாரோ அவரைதான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு அவரே சொன்னாரு”
good epi Sasi.waiting for next epi.thanks & good luck.