(Reading time: 29 - 57 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

கெடுவையும் ரிஷி சொன்ன விளக்கத்தையுமே மனதில் வைத்து புலம்பிக்கொண்டிருந்தாள்.

   

”என்ன செய்றது இப்ப நாள் குறைவா இருக்கா இல்லை எனக்கு அப்படி தோணுதா என்னால எந்த முடிவும் எடுக்கமுடியலை. அதோட அர்ஜூன் அண்ணாவை போல அத்தான் என் மனசை புரிஞ்சிக்க மாட்டேங்கறாரு. என்னைப்பார்த்தாலே கோபமா பேசறாரு இல்லை பாசமா பேசறேன்னு அவரும் குழம்பி என்னையும் குழப்பறாரு. அண்ணா சொல்றத பார்த்தா அத்தான் என்னை விரும்பறார்ன்னா ஏன் அதை அவர் என்கிட்ட சொல்லமாட்டேங்கறாரு. என்ன காரணம் ஆஸ்தி அந்தஸ்து பார்க்கறாரா இல்லை வேற ஏதாவது காரணமா. 

   

அவரை பொறுத்தவரைக்கும் இந்த 3 பொண்ணுங்க தேவையில்லை அதுக்கு பதிலா என்னை கொண்டு போய் நிப்பாட்ட நினைக்கிறாரு அது எப்படி காதலாகும். நான் இதுக்கு ஒத்துக்க மாட்டேன். அவரே அவர் மனசுல இருக்கறத சொல்லட்டும் அப்பதான் நான் அவர் வீட்டுக்கு போவேன். நான் பாட்டுக்கு அவர் வீட்டுக்கு போயி அவர் அப்புறம் வேணாம்னு சொல்லிட்டா எனக்கு கஷ்டமா போயிடும். அந்த 3 பொண்ணுங்க போனதும் என்னையும் போக சொல்லிடுவாரு. 

   

எனக்கு தெரியும் இதுக்காக ஏன் நாம அந்த வீட்டுக்கு போகனும் தேவையில்லை. நான் போகப்போறதில்லை. அவர் மனசுல என்ன இருக்குன்னு அவர் சொல்லட்டும் அப்புறம் நம்ம மனசுல இருக்கறத சொல்லிக்கலாம் அதான் சரி அதான் 3 நாள் இருக்கே அதுக்குள்ள அத்தான் ஏதாவது முடிவு எடுத்துடுவாரு. 

   

ஏன் இப்ப கூட ஏதாவது முடிவு எடுத்து வைச்சிருப்பாரு. காலையில அவருக்கு போன் பண்ணிப்பார்க்கலாம் அவர்ட்ட பேசினா ஒரு ஐடியா கிடைக்கும். நேர்ல பார்த்தா தான் என்கிட்ட கோபப்படுவாரு திட்டுவாரு சரி போன்ல எப்படி திட்டுவாரு பார்த்துக்கலாம் இதை தவிர வேற வழியில்லை. 5வது நாள் அண்ணா வந்து இங்க நின்னு என்னம்மா முடிவுன்னு கேட்கறதுக்குள்ள அத்தான் மனசு மாறி என்கிட்ட உண்மையை சொல்லனும். 

   

அந்த முடிவு எதுவானாலும் சரி நான் என் மனசுல இருக்கறத சொல்றது சுலபம் எனக்கும் அத்தானை பிடிச்சிருக்கு. அவரோட எப்பவும் இருக்கனும்னு நினைப்பிருக்கு ஆனா என் நிலைமை நான் அனாதை எல்லாமே அத்தானுக்கு தெரியும். அவர் என்னை பத்தி என்ன 

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.