“ஹேய் செல்லம்ஸ், கோபப்படாதே. பிரின்சஸ்க்கு பிடிச்ச மாதிரியே நடந்து எனக்கு பழகிப் போச்சு. இப்போ தானே என் கிட்ட நீ பேசவே செய்ற, கொஞ்சம் கொஞ்சமா நீயே புரிஞ்சுப்ப.”
“ம்ம்ம்... நான் தான் புரிஞ்சுக்கனுமா?”
“நானும் உன்னை புரிஞ்சுக்குறேன். ஆனால் இப்போவே எனக்கு உன்னை பத்தி நிறைய தெரியும். உனக்கு தான் என்னை பத்தி ஒன்னுமே தெரியாது!”
“அப்படி என்ன என்னைப் பத்தி தெரியும் உங்களுக்கு?”
“சொல்றேன் கேளு. நைட் பேய் மாதிரி தலையை விரிச்சு போட்டுட்டு சுத்துவ! அன்னைக்கு சுவரேறி குதிச்சு வந்தப்போ ஒரு நிமிஷம் பயந்தே போயிட்டேன்.”
கீதா கோபத்துடன் பல்லைக் கடித்தாள்!
“என்ன கீத்ஸ் சத்தமே காணும்?”
கீதா பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்.
“என்னடா இந்த லூசு காதல் கவிதை படிக்காம பேய் கதை சொல்றான்னு தானே யோசிக்குற? நம்ம காதலுக்கு கவிதை படிக்கனுமா என்ன, உன்னை பார்த்தாலே போதுமே! எப்போடா கல்யாணம் ஆகும்னு இருக்கேன் கீத்ஸ்.”
கீதா இப்போதும் மௌனமாகவே இருந்தாள்!
“ஹேய் கீத்ஸ்...”
“ம்ம்ம்ம்...”
“என்ன நீ, என்ன சொன்னாலும் அமைதியா இருக்க?”