தொடர்கதை - ரோஜாவை தாலாட்டும் தென்றல் - 33 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
நாட்கள் நத்தை வேகத்தில் மெல்ல மெல்ல நகர்ந்துச் செல்ல, கீதா, விஜயின் திருமண நாளும் மெல்ல நெருங்கி கொண்டிருந்தது.
கீதாவும் விஜயும் வேறு ஒரு தணி உலகத்தில் வாழ்ந்துக் கொண்டிருந்தார்கள். இருவருமே சந்தோஷமும் ஆவலுமாக தங்களுடைய திருமண நாளை எதிர்பார்த்திருந்தார்கள்.
அன்றும் ஈவ்னிங் ‘ஃபோன்’ ஷிஃப்ட்டில் இருந்த கீதா, வெளியே பேச்சு சத்தம் கேட்டு தன் அறையின் வெளியே எட்டிப் பார்த்தாள்.
ஃபோனில் அவளிடம் எதுவோ சொல்லிக் கொண்டிருந்த விஜய், கீதா உடனே பதில் சொல்லாமல் இருக்கவும்,
“கீத்ஸ்???? என்ன தூங்கிட்டீயா??? அவ்வளவுக்கா அறுவையா பேசுறேன்? கீத்ஸ் கீத்ஸ்,” என்று பரபரத்தான்.
“ஹையோ! ஹையோ! கொஞ்ச நேரம் சும்மா இருக்கீங்களா? வெளியே சத்தம் கேட்டுச்சேன்னு பார்த்தேன்,” என சொல்லி அவனை அடக்கினாள் கீதா.
“ஹப்பாடியோ, அவ்வளவு தானா??? நானும் என்னவோ ஏதோன்னு நினைச்சு பயந்து போயிட்டேன். அடுத்து வருங்கால மனைவியிடம் பேசுவது எப்படின்னு யார் கிட்டேயாவது அட்வைஸ் கேட்கனுமோன்னு நினைச்சேன்!”
“ஹலோ, வாயை மூடவே மாட்டீங்களா?”
“ஹிஹிஹி! மத்தவங்க கிட்ட அப்படி தான்... பட் நீ நினைச்சா...”
விஜய் சொல்ல வருவது புரிந்து முகம் சிவந்த போதும், அதை காட்டிக் கொள்ளாமல்,
“விஜய், விஜய்... தியாகு அண்ணா வந்திருக்கார். கொஞ்ச நேரம் கழிச்சு நானே உங்களுக்கு ஃபோன் செய்றேன்,” என்றாள்.