கொண்டே கீதா தியாகுவின் பக்கத்தில் வந்து அமர்ந்தாள்.
தியாகு அவளின் பேச்சை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதை காட்டும் விதமாக, “சித்தி வேற என்ன செய்வாங்க கீது? தாலாட்டி, பாராட்டி, செல்லம் கொடுத்து வளர்த்த இந்த பொண்ணு, நமக்கு கொஞ்சம் கூட ஹெல்ப் செய்யாம இப்படி கதை பேசிட்டு இருக்கேன்னு அவங்களுக்கு வருத்தம்,” என தங்கையிடம் சொன்னான்!
“அம்மாக்கு வருத்தமா இல்ல உங்களுக்கு பொறாமையா?”
“பொறாமையா??? நானே என் ஃப்ரென்ட் அந்த அப்பாவி விஜயை நினைச்சு ஃபீல் செய்துட்டு இருக்கேன். தெரிஞ்சே இப்படி ஒரு குட்டி பிசாசை அவன் தலையில் கட்டுறேனேன்னு வருத்தமா இருக்கு!”
“ரொம்ப ஓவரா பேசினீங்கன்னா உங்களை அந்த கிருத்திகா கையில பிடிச்சு கொடுத்திருவேன்! ஜாக்கிரதை!”
“அது யார் அந்த பூச்சாண்டி?” என புரியாமல் கேட்டான் தியாகு.
“உங்க உயிர் நண்பரோட தங்கச்சி!”
“ஓ,” என்றான் தியாகு சுவாரசியம் இல்லாமல்.
“ஏன் தியாகு அவ்வளவு க்ளோஸ் ஃரென்ட்ன்னு சொன்ன, மாப்பிளையோட தங்கையை உனக்கு தெரியாதா?” சாரதா தியாகராஜனிடம் வினவினாள்!
“நான் அவன் வீட்டுக்கெல்லாம் போனதில்லை சித்தி. அவனுக்கு தான் என் வீட்டுல அதி முக்கிய வேலை இருந்தது. அப்பப்போ வருவான்,” என்றப்படி கீதாவை பார்த்த தியாகு, அவள் பே பே என விழிப்பதை பார்த்து ரசிக்கும் சின்ன புன்சிரிப்போடு மேலே பேசினான்.
“எனக்கு அவன் ஃபேமிலி பத்தி தெரியும். நீங்க சொல்ற இந்த பொண்ணு அவன் சித்தப்பா பொண்ணு தானே? சொல்லி இருக்கான்! ஆனால் ரொம்ப எல்லாம் இந்த சப்ஜக்ட் நாங்க