பேசினதில்லை.”
“பேசலைனாலும் பரவாயில்லை பரவாயில்லை... இப்படி ருத்திராட்ச மாலை எல்லாம் போட்டுட்டு சுத்துறீங்களே உங்களுக்கு அவ தான் சரி!” என்றாள் கீதா பொய்யான மிரட்டும் தோரணையில்!
தியாகு அதற்கு பதில் சொல்லும் முன் முந்திக் கொண்ட சாரதா,
“கீதா, விளையாட்டுக்கு கூட அப்படி சொல்லாதே. அந்த குட்டி சாத்தானை பிடிச்சு வச்சுட்டு அக்கா வீட்டுல எல்லோரும் கஷ்டப் படவா??? பொண்ணா அது...!” என்றாள் வெறுப்புடன்!
“என்ன சித்தி இப்படி பயங்கரமா சொல்றீங்க?”
“நான் சொல்றது ரொம்ப கம்மி தியாகு! எப்போ பாரு மூஞ்சில அடிச்ச மாதிரி தான் பேசுறா. என்னவோ அவ பெரிய கிளியோபட்ரா மாதிரி என் பொண்ணை பத்தி நான் இருக்கும் போதே குறைச்சு சொல்றா. விஜய் கொஞ்சம் மரியாதை தெரிஞ்சவரா இருக்கார். அவரோட சித்தி சித்தப்பா கூட ரொம்ப நல்லவங்களா இருக்காங்க. அவங்களுக்காக தான் நான் அமைதியா இருக்கேன். ஆனாலும் அவ இருக்க வீட்டுல என் பொண்ணு இருக்கனுமேன்னு கவலையா தான் இருக்கு!”
“சும்மா அப்படி எல்லாம் சொல்லாதீங்க அம்மா. ஒன்னு ரெண்டு வார்த்தை ஹார்ஷா பேசினா அவ கெட்டப் பொண்ணா ஆகிடுவாளா? இந்த சின்ன வயசுல எவ்வளவு அச்சீவ் செய்திருக்கா. வீட்டுல ஒரே பொண்ணு வேற, ஸோ சோ ரொம்ப செல்லம்...”
“ஏன் அவளை போல நீயும் இங்கே ஒரே பொண்ணு தானே? நீ எங்களுக்கு செல்ல பொண்ணு தானே? அந்த பொண்ணு என்னவோ உலகத்துல இல்லாத அதிசயமால இருக்கு!”
“விடுங்கம்மா! இப்படி ஏதாவது அவர் முன்னாடி சொல்லி வைக்காதீங்க. அவருக்கு கிருத்திகா மேல பாசம் அதிகம்.”
“அடிப்பாவி! பார்த்தீயா தியாகு, இவ இப்போ சொல்றதை! பொண்ணு பார்க்க வந்த அன்னைக்கு