(Reading time: 8 - 15 minutes)
Rojavai thalattum thendral
Rojavai thalattum thendral

   

“என் நண்பன் அங்கே என்ன செய்றான்?”

   

“கேட்டு சொல்றேன்! இப்போ குட் பாயா போன் கட் செய்துட்டு வேலையை பார்ப்பீங்களாம்.“

   

“கீத்ஸ்...”

   

விஜயிடம் செல்லம் கொஞ்சி, கொஞ்சலாக மிரட்டி என்று ஒரு வழியாக ஃபோனை வைத்து விட்டு கீதா தியாகு இருந்த பக்கம் வந்த போது, சாரதாவும், தியாகுவும் அவளை பற்றி தான் பேசிக் கொண்டிருந்தார்கள்.

   

“...எப்போ பாரு ஃபோனும் கையுமா தான் இருக்கா! காலையிலே தூங்கி எழுந்து பார்த்தா ஃபோனோட இருக்கா. நைட்டு தூங்க போறப்பவும் அதே தான்!”

   

“ஹ்ம்ம்!!! எனக்கு ரொம்ப நாளாவே ஒரு டவுட் சித்தி. அது ஏன் இப்படி கல்யாணத்துக்கு முன்னாடி விழுந்து விழுந்து மணிக் கணக்கில பேசுறாங்க? கல்யாணத்துக்கு அப்புறம் அவ்வளவு வருஷம் இருக்கே, பொறுமையா பேசலாமே?” தியாகு சீரியஸாகவே டவுட் கேட்டான்!

   

“அதென்னவோ இந்த காலத்துல தான் இதெல்லாம்! நல்ல வேளை முன்ன போல பி.எஸ்.என்.எல் மட்டுமில்லை. வாட்சப், மொபைல் அன்லிமிடட் டாக் அது இதுன்னு இருக்கிறதால பரவாயில்லை! இல்லன்னா, நான் இவ கல்யாணத்துக்கு செய்ற செலவை விட அதிகமா டெலிஃபோன் பில் கட்டனும்.”

   

“அம்மா!”

   

கீதாவின் குரல் கேட்டு இருவரும் பேச்சை நிறுத்தி விட்டு அவள் குரல் வந்த பக்கம் பார்த்தார்கள்.

   

“ஏன்மா இந்த சாமியார் கிட்ட போய் இந்த கதை எல்லாம் சொல்லிட்டு இருக்கீங்க?” கேட்டுக் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.