இவளோட மாப்பிளை பேசிட்டு இருந்தப்போ கிருத்திகா கையை பிடிச்சு இழுத்துட்டு போயிட்டான்னு குற்ற பத்திரிக்கை வாசிச்சது என்ன, இப்போ அவருக்கு பிடிக்காதுன்னு சொல்றது என்ன????”
“விடுங்க சித்தி! இந்த பொண்ணுங்களே இப்படி தான். ஆல் பொய் பாசம்ஸ். இருபது இருபத்தி அஞ்சு வருஷம் வளர்க்குற அம்மா அப்பா கிட்ட காட்டுற பாசத்தை விட பல மடங்கு அன்பை அவங்க கிட்ட வந்து மாட்டுற அப்பாவி கிட்ட காட்டுவாங்க. இதை பத்தி தான் விவேகானந்தர் என்ன சொல்லி இருக்கார்ன்னா...”
“அண்ணா, வேண்டவே வேண்டாம்... கிருத்திகா வச்சு எல்லாம் நான் உங்களை ஓட்டலை. என்னை விட்ருங்க!!!”
“கிருத்திகா எல்லாம் நம்ம தியாகுக்கு சரியா இருப்பாளா? அவன் மனசுக்கும் அவன் அம்மா மனசுக்கும் ஏத்த மாதிரி மகாலட்சுமி போல ஒரு பொண்ணு வந்து அவங்க வீட்டுல குத்துவிளக்கு ஏத்தி வைப்பா.”
“ஏன் சரஸ்வதி, பார்வதி எல்லாம் ஏத்துனா விளக்கு எரியாதா????” என தியாகு கலாய்க்க, அவனோடு இணைந்துக் கொண்ட கீதா,
“அதானே ஒரு குத்து விளக்கை ஏத்தவா கல்யாணம் செய்யனும்?? பெரியம்மா பெரியப்பா நம்ம சூப்பர்மேன் அண்ணா இவங்கல்லாம் ஏத்துனா அந்த விளக்கு எரியாதா????” என்றாள்.
“அதானே பார்த்தேன்!!! உங்க கூட எல்லாம் பேச வந்தேன் பாருங்க, என்னை சொல்லனும். அண்ணனும் தங்கையும் ஒரு சான்ஸ் கிடைச்சா போதும், என்னையே கிண்டல் செய்ய ஆரம்பிச்சிடுவீங்களே!”
“ஹையோ சித்தி, நோ நோ... நான் எப்போவும் உங்க சைட் தான்,” என்று தியாகு சாரதாவை சமாதானப் படுத்த முயல,
“நான் எப்போவும் உங்க ஆப்போசிட் சைட் தான்ம்மா,” என்று சொல்லி தான் ஒரு ‘பாசக்கார மகள்’ என்று காட்டினாள் கீதா.