“முன்னாடி எல்லாம் இந்த அளவுக்கு இல்லை. இப்போ ரொம்ப ஓவர் ஆம்பிஷன் இருக்க கரியர் வுமன் ஆகிட்டா. தெரிஞ்சோ தெரியாமலோ இப்படி பேசுறா. ஆனால் ஒன்னு. அவ நினைச்சிருந்தா என்னை மாதிரியே சித்தப்பாவோட நிழல்ல ஈசியா கரியர் ஸ்டார்ட் செய்திருக்கலாம். அவ அப்படி செய்யலை பார்த்தீயா!”
“ம்ம்ம்ம் சரி சரி போதும் உங்க தங்கையை புகழ்ந்தது. நீங்களும் ஒன்னும் குறைச்சல் இல்லை. அங்கிள்க்கும் ஹெல்ப் செய்ய ஒருத்தர் வேணுமே.”
“என் செல்லம் கீத்ஸ் நீ! இரு இரு சித்தி கிட்ட போன் கொடுக்குறேன்.”
“ஐயோ அத்தை கிட்டேயா?? எதுக்கு???“
கீதா கொஞ்சம் பதற்றத்துடன் சொல்லி முடிக்கும் முன், சிவகாமியின் குரல் மறுப்பக்கம் கேட்டது.
“அவன் என் கிட்ட ஃபோனை கொடுத்துட்டான் கீதா. அவனுக்கு நிச்சயம் எல்லாம் வேண்டாமாம். நேரா கல்யாணம் வைங்கன்னு சொல்லிட்டு இருக்கான். அதுவும் சீக்கிரமா வைக்கணுமாம். உனக்கு சரியாம்மா??”
கீதாவிற்கு விஜய் ஏன் அப்படி சொல்லி இருப்பான் என புரிந்ததால் அவன் மீது காதலும், கூடவே வெட்கமும் வர,
“அதை எல்லாம் அப்பா கிட்ட தான் கேட்கணும் அத்தை,” என்றாள் மெல்லியக் குரலில்!
“என் ராஜாத்தி! இப்படி தான் இருக்கனும். இந்த ரவுடி பையன் ரொம்ப லக்கி தான். நான் மாமா கிட்ட சொல்லி உன் அப்பா கிட்ட பேச சொல்றேன்ம்மா.”
❀✿❀✿❀✿