சொன்னதுப் போலவே இரண்டு குடும்பமும் பேசி, இரண்டு மாதத்தில் திருமணம் என்று முடிவு செய்தார்கள்.
கீதாவும், விஜயும் தினமும் மாலையில் ஃபோனில் பேசுவதையும், நாள் முழுக்க மெசேஜ் அனுப்புவதையும் வழக்கமாக்கிக் கொண்டார்கள்!
நாட்கள் மெல்ல செல்ல, திருமணத்திற்கு சேலை வாங்கும் நாள் வந்தது.
கீதாவின் அம்மா சாரதாவும், தியாகுவின் அம்மா செவ்வந்தியும் நெருங்கிய தோழி போல பழகுபவர்கள் என்பதால், கீதாவின் திருமணத்திற்கு சேலை எடுக்க சென்றப்போது, செவ்வந்தியும் அவர்களுடன் வந்திருந்தாள்.
விஜயுடன் அவன் சித்தப்பா, சித்தி மற்றும் கிருத்திகாவும் வந்திருந்தார்கள்.
அனைவருமாக தேடி தேர்ந்து எடுத்த சேலையை கீதா தன் மேலே வைத்து அழகு பார்க்க, கிருத்திகா,
“சில பேருக்கு எல்லாமே செட் ஆகும், சில பேருக்கு எதுவுமே செட் ஆகாது. நீங்க செகண்ட் கேட்டகரி, எதுக்கு வேஸ்ட்டா ட்ரை செய்து பார்க்குறீங்க?” என்றுக் கேட்டாள்.
விஜயுடன் பேசி பேசி கிருத்திகாவை பற்றி ஓரளவிற்கு தெரிந்து வைத்திருந்ததால் கீதா இந்த முறை வருத்தப்படவில்லை. கிருத்திகா அவள் பாணியில் கேலி செய்கிறாள் போலும் என நினைத்துக் கொண்டாள்.
சாரதாவிற்கு கிருத்திகா பேசிய விதம் பிடிக்கவில்லை, ஆனாலும் சிவகாமியின் மகள் என்றக் காரணத்திற்காக அமைதியாக இருந்தாள்.
செவ்வந்தியால் அப்படி இருக்க முடியவில்லை!
“ஏன், எங்க கீதாக்கு என்ன குறைச்சல்? அவளுக்கும் எல்லாமே அழகா இருக்கும்,” என்றாள்