(Reading time: 25 - 49 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

”அத்தை என்ன அத்தை இது இவளும் என்னைப்போலவே இருக்காளே”

   

“ஆமாம் அடக்கமாவும் அழகாவும் இருக்கா”

   

“எனக்கு பயமாயிருக்கு அத்தை”

   

“சீ சீ நீ ஏன் பயப்படற என்னை நம்பி வந்திருக்க நான்தான் முன்னாடியே உன்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டேன்ல அப்புறம் என்ன நீ தைரியமா இரு சரியா” என சொல்ல அவளும் தலையை ஆட்டினாள்.

   

சோனாவிடம் வந்த மோகனசுந்தரம்

   

”சாரிம்மா இப்படி புதுசா ஒரு என்ட்ரி வரும்னு எனக்கு தெரியாது”

   

“இட்ஸ் ஓகே அங்கிள் ரிலாக்ஸ் எத்தனை பொண்ணுங்க வந்தாலும் சரி என்கிட்ட மோதி ஜெயிக்க முடியாது நான் பார்த்துக்கறேன்” என சொல்லவும் அவரும் நிம்மதியாகி தன் இடத்தில் சென்று அமர்ந்தார்

   

ரிஷியோ அர்ஜூனை முறைத்தான். அவன் கண்களாலேயே ரிஷியிடம்

   

”என்ன” என கேட்க அதற்கு ரிஷி கையில் இருந்த வாட்ச்சை காட்டி ”இதான் வர்ற நேரமா” என கையாலும் கண்களாலும் சைகை செய்ய அர்ஜூன் பதிலுக்கு

   

”என்னை என்ன செய்ய சொல்றீங்க எல்லாம் நந்தினியாலதான் லேட்டு” என நந்தினியை காட்டி சைகை செய்யவும் அதைப்பார்த்த தாத்தா ரிஷியை கண்களால் அடக்கிவிட்டு நந்தினியை பார்த்து பேச ஆரம்பித்தார்.

   

”உன் பேரு என்னம்மா”

   

“நந்தினி தாத்தா” என்றாள் அன்பாக சிரித்துக்கொண்டே சொன்ன அவளைப்பார்த்து

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.