(Reading time: 25 - 49 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

குறுக்குவழி பயன்படுத்தக்கூடாது. நேர்மையா நியாயமா இதுல நடந்துக்கனும் அப்படி நீங்க உண்மையா நடந்துக்கிட்டு ஜெயிச்சீங்கன்னா அதைதான் நான் ஒத்துக்குவேன்” என சொல்ல அந்த 4 பெண்களும் சரியென தலையை ஆட்டினார்கள்.

   

”8வது விதி இந்த போட்டியில ஒருவேளை ஒருத்தர் தேர்ந்தெடுக்கப்பட்டுட்டா மீதி பேர் அதுக்கு எதிர்ப்பு தெரிவிக்காம பழிவாங்காம இயல்பா எடுத்துக்கிட்டு ஒதுங்கிடனும். நான்தான் உங்கள்ல ஒரு பொண்ணை தேர்ந்தெடுப்பேன். கடைசி நேரத்தில சண்டையெல்லாம் போடக்கூடாது.” என சொல்ல அந்த 4 பெண்களும் சரியென தலையை ஆட்டினார்கள்.

   

”9வது விதி இந்த போட்டி உங்கள்ல எத்தனை பேருக்கு சுலபமா இருக்குமோ இல்லை கடினமா இருக்குமோ எனக்கு தெரியாது ஆனா கொடுக்கற போட்டி எல்லாத்திலயும் நீங்க கலந்துக்கனும் முடியாதுன்னு சொல்லி ஒதுங்கிட முடியாது. எல்லா போட்டியுமே வீட்லதான் நடக்கும் வெளிய போக வேண்டிய அவசியம் இல்லை. 

   

ஒரு மருமகளா நீங்க எப்படி நடந்துக்குவீங்கன்ற போட்டிங்கறதால சமையல் வேலைகள் மற்ற வேலைகள் இருக்கும் இங்கிருக்கற வேலைக்காரங்க மத்த வேலைகளை செய்துடுவாங்க. நாளைக்கு காலையில 8 மணியிலிருந்து நைட் 10 வரைக்கும் போட்டி ஆரம்பமாகும் இந்த போட்டி முடியறவரைக்கும் 3 வேளையும் நீங்கதான் சமையல் செய்யனும் அதுக்காக கிச்சன்ல 4 அடுப்புகளையும் தயாராக வைச்சிருக்கேன் உங்க 4 பேருக்காகவே தனித்தனியா எல்லா பொருட்களையும் பிரிச்சும் வைச்சிட்டேன்.

   

 காபி டீ போடறதுங்கறது உங்களால முடிஞ்சா செய்யலாம் இல்லைன்னாலும் பரவாயில்லை ஆனா 3 வேளையும் டிபன் மதியம் சாப்பாடு டின்னர் எல்லாத்தையும் நீங்கதான் தயார் செய்யனும் உங்க கைத்திறமையை நாங்க எல்லாரும் பார்ப்போம். அளவா செய்ங்க அதிகமா செய்ய வேணாம். 4  பேரும் எப்படி சமைக்கறீங்கன்னு பார்க்கறோம்” என சொல்ல அந்த 4 பெண்களும் சரியென தலையை ஆட்டினார்கள்.

   

”10 வது விதி இந்த வீட்ல உங்க 4 பேருக்குமே ஒரே ரூம்தான் கொடுப்பேன். அது ரொம்ப பெரிசு ரிஷியோடதுதான் தாராளமா அங்க 4 பேர் தங்கலாம் உங்க 4 பேருக்காக தனித்தனியா கட்டில் டேபிள் சேர் பீரோ அலமாரின்னு எல்லாமே தனியா இருக்கும் உங்களோட உடமைகளை நீங்கதான் பத்திரமா பார்த்துக்கனும் வேலைக்காரங்க உங்க துணிகளை 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.