“இல்லை உங்க வீட்ல இருக்கறவங்களுக்கே பாதிப்பு வராதப்ப எங்களுக்கும் எதுவும் வந்துடாது எப்பவும் போல இருங்க”
”தாத்தா எங்களை பத்தி எல்லாத்தையும் விசாரிச்சிட்டேன்னு சொன்னீங்களே அப்படியிருக்கறப்ப இந்த போட்டியே தேவையில்லையே விசாரிச்சத வைச்சே நீங்க ஆளுங்களை தேர்ந்தெடுத்துக்கலாமே இந்த போட்டி வைச்சி அதுல ஜெயிச்சி இது தேவையா” என்றாள் மிருதுளா
“உங்களை பத்தி விசாரிச்சது உண்மைதான் ஆனா நீங்க எப்படி பட்டவங்கன்னு எனக்கு தெரியனும்ங்கறதுக்காக மட்டும் இல்லை காலம் முழுக்க இந்த வீட்ல வாழப்போறீங்க வீட்ல இருக்கறவங்க உங்களை இப்பவே நல்லா புரிஞ்சிக்கிட்டா ஒண்ணு அவங்க உங்களுக்கு அட்ஜஸ்ட் பண்ணிக்குவாங்க இல்லை நீங்க அவங்களுக்கு அட்ஜஸ்ட் பண்ணிக்குவீங்க அதனாலதான்”
மறுபடியும் சோனாவே தாத்தாவிடம்
”எங்க எல்லாருக்கும் ஒரே ரூம் கொடுத்திருக்கீங்க ஓகே ஆனா எனக்கு தனியா இருந்து பழக்கம் என்னால எப்படி முன்ன பின்ன தெரியாத 3வது மனுஷங்களோட 1 மாசம் ஒரு ரூம்ல தங்கி இருக்க முடியும்”
”இந்த வீட்ல இருக்கறவங்களும் உன்னை பொருத்தவரைக்கும் 3வது மனுஷங்கதான் இவங்களோட நீங்க ஒண்ணா வாழனும்னா அதுக்கு முன்னாடி உங்க வயசு ஆளுங்களோட நீங்க ஒண்ணா இருந்தா வித்தியாசம் தெரியாது. தனியா தங்கனும்னு இப்ப தோணிச்சின்னா நாளைக்கு தனியா வாழனும்னு தோணும் இந்த வீடு கூட்டுக்குடும்பமா இருக்கனும்னு இத்தனை வருஷமா நான் எல்லாரோடவும் அட்ஜஸ்ட் பண்ணி இப்படி ஒத்துமையா இருக்கோம் அந்த ஒற்றுமையை நீங்க கெடுக்க கூடாது அதுக்கு முதல் விசயம்தான் இந்த ஒரே அறையில தங்கறது புரியுதா” என சொல்ல அவளும் தலையை ஆட்டினாள்.
”எத்தனை நாள் வரைக்கும் இருக்க முடியுதோ அது வரைக்கும் இருக்கலாம்னு சொல்றீங்களே