தோய்க்கறது சுத்தம் செய்றது செய்வாங்க அதைபத்தி நீங்க கவலைப்படவேணாம் ஆனா இங்க இருக்கற நாட்கள்ல நீங்க ஹாஸ்டல்ல தங்கறத போல தான் நினைக்கனும். ஹாஸ்டல்ல எப்படி இருப்பாங்களோ அப்படித்தான் இருக்கனும் ஒருத்தருக்கொருத்தர் விட்டுக்கொடுத்து அட்ஜஸ்ட் பண்ணிக்கனும் புரியுதுங்களா” என சொல்ல அந்த 4 பெண்களும் சரியென தலையை ஆட்டினார்கள்.
”இவ்ளோதான் இந்த 10 விதிமுறைகளைதான் நான் சொல்ல காத்திருந்தேன் கவனமா கேட்டுக்கிட்டீங்கள்ல இதுல ஒண்ணு நீங்க மறந்து போய் செஞ்சாலும் சரி உங்களை அனுப்பிடுவேன் போட்டியை போட்டியா நினைங்க உங்கள்ல யார்கூடவும் சண்டை போடக்கூடாது.
இப்ப மணி 8 இன்னிக்கு நீங்க எல்லாரும் சாப்பிடலாம் ஆனா நாளையிலிருந்து நீங்கதான் சமைக்கனும் நான் சொன்ன 10 விதிகள்ல சந்தேகம் இருக்கறவங்க கேள்விகள் கேட்கலாம் சந்தேகம் இருந்தாலும் கேட்கலாம் இல்லை இந்த விதி எனக்கு பிடிக்கலைன்னு சொல்றவங்களும் அதைப்பத்தி சொல்லலாம் என்கிட்ட எதைப்பத்தி வேணும்னாலும் டிஸ்கஸ் செய்யலாம் நான் உங்களுக்கு பொதுவானாவன். என்னைத்தவிர இந்த வீட்ல வேறு யார்கிட்டயும் டிஸ்கஸ் செய்யாதீங்க உதவிக்கு சுசித்ரா இருக்கா கேளுங்க என்ன கேட்கனுமோ கேளுங்க” என தாத்தா சொல்ல சோனா தாத்தாவிடம்
”தாத்தா இந்த போட்டிகள் எனக்கு ஆபத்தானதா இருக்குமா இல்லை எல்லார் வீட்லயும் இருக்கற வேலைகளைதான் நீங்க செய்ய சொல்வீங்களா”
“ஒரு மருமகளா இந்த வீட்ல எப்படியிருக்கனும் எப்படி நடந்துக்கனும்னுங்கறது தெரிஞ்சிக்கதான் இந்த போட்டி அதனால பெரிய பெரிய ஆபத்தான செயல்கள்ல உங்களை நான் மாட்டிவிடமாட்டேன். அதுக்கு அவசியம் இல்லை ஏதாவது சில வேலைகள் உங்களால முடியாத பட்சத்தில என்கிட்ட சொல்லிட்டு ஒதுங்கிடலாம் 3 வாய்ப்புகள் தரேன். இந்த 3 வாய்ப்புகளை சரியான நேரத்தில சரியான விசயத்துக்கு பயன்படுத்திக்குங்க போதுமா வேற” என அவர் கேட்க அடுத்து வந்தனா
”தாத்தா நீங்க சொன்ன மாதிரியே என் வீட்ல நான் எப்படியிருந்தேனோ அப்படியே இங்க இருக்கேன். ஆனா அதனால யாராவது பாதிக்கப்பட்டா”