(Reading time: 25 - 49 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

கூட்டிட்டு வந்த ஆளுங்க கூட உங்களுக்கு உதவி செய்யக்கூடாது. நேராகவோ மறைமுகமாகவோ உங்களுக்கு உதவின விசயம் எனக்கு தெரிஞ்சா அந்த நிமிஷமே சம்பந்தப்பட்ட ஆளுங்களை இந்த போட்டியை விட்டு விலக்கிடுவேன். அதுக்காக உங்களை நான் தனியா விடப்போறதில்லை இதோ என் மருமகள் சுசித்ரா இருக்கா அவள் உங்களுக்கு பேரளவுக்குதான் உதவி செய்வா அதுவும் கொஞ்சமாதான் உதவுவா புரியுதா” என சொல்ல அந்த 4 பெண்களும் சரியென தலையை ஆட்டினார்கள்.

   

”4வது விதி இந்த வீட்ல இருக்கறவரைக்கும் மதிப்பு மரியாதையோட இருக்கனும் சண்டையெல்லாம் போடகூடாது சக போட்டியாளர்களை கேவலமா பேசறது நடத்தறது கூடாது எல்லாருமே எனக்கு ஒண்ணுதான் நான் கவனிச்சிட்டேதான் இருப்பேன் உங்களால யாருக்காகவது பாதிப்பு வந்தாலும் நான் சம்பந்தப்பட்டவங்களை இந்த போட்டியை விட்டு விலக்கிடுவேன்” என சொல்ல அந்த 4 பெண்களும் சரியென தலையை ஆட்டினார்கள்.

   

”5வது விதி  இந்த போட்டி வெறும் ரிஷிக்கான மனைவியை தேடறது கிடையாது. இந்த வீட்டுக்கு தகுதியான மருமகளை தேடறதுக்காக நடத்தறேன். அதை மனசுல வைச்சிக்கிட்டு நீங்களும் இருக்கனும் அதுக்கு ஏத்த மாதிரி நீங்களும் இந்த வீட்டு கௌரவத்துக்கு எந்த களங்கமும் வராம நடந்துக்கனும் இந்த போட்டியை விளையாட்டா நினைக்க கூடாது. உண்மையிலயே இந்த போட்டியை மதிக்கனும் பொய் சொல்றது பழிபோடறது கூடாது” என சொல்ல அந்த 4 பெண்களும் சரியென தலையை ஆட்டினார்கள்.

   

”6வது விதி இந்த வீட்ல இருக்கறவங்களை மதிக்கனும் ரிஷிக்காகதானே வந்தோம் அவனுக்கு பிடிச்சத செய்யலாம் அது மட்டுமே போதும்னு நினைக்க கூடாது எல்லார் கூடவும் நல்லா பழகனும் பாரபட்சம் காட்டக்கூடாது. உங்களோட எண்ணங்களுக்கு எதிரா யாராவது இருந்தா அவங்களை வெறுக்க கூடாது. போட்டியை தவிர மீதி நேரத்தில எல்லாரும் ஒற்றுமையா இருக்கனும் பேசனும் பழகனும்” என சொல்ல அந்த 4 பெண்களும் சரியென தலையை ஆட்டினார்கள்.

   

”7வது விதி உங்க வீட்ல நீங்க எப்படியிருந்தீங்களோ அப்படியே இங்க இருந்தா போதும் நீங்க வர்றதுக்கு முன்னாடி உங்க வீட்ல அக்கம் பக்கத்தில உங்களோட பழகறவங்க கிட்ட உங்களை பத்தி நான் விசாரிச்சிட்டேன் ஒரு வேளை நீங்க இங்க இயல்பா நடந்துக்காம நடிச்சீங்கன்னா அதை நான் உடனே புரிஞ்சிக்குவேன். அப்படி நீங்க நடிச்சி இந்த போட்டியில ஜெயிக்ககூடாது. 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.