(Reading time: 25 - 49 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

   

”ஏம்மா லேட்டு இன்னும் சீக்கிரமாவே வந்திருக்கலாமே”

   

“முடிவு எடுக்க லேட் ஆனதால இங்க வர்றதுக்கும் லேட்டாயிடுச்சி தாத்தா”

   

“ஏன்ம்மா இங்க தங்கறது என்ன அவ்ளோ கஷ்டமான முடிவா”

   

“இங்க தங்கறதைவிட இங்க இருக்கறவங்க மனசுல தங்கறது முக்கியமாச்சே தாத்தா”

   

“ஓ அப்படியா சரிம்மா இந்த வீட்டை பார்த்தியா எப்படியிருக்கு வீடு” என கேட்க அவளும் அமர்ந்த இடத்திலேயே தன்னால் முடிந்தவரை அந்த வீட்டை சுற்றி சுற்றி பார்த்தவள் சிரித்துக்கொண்டே அவரிடம்

   

”அழகு இருக்கற இடத்தில ஆபத்து இருக்கும்னு சொல்வாங்க அதோட இந்த வீடு அழகாவும் இருக்கு கூட ஆபத்தும் இருக்குமோன்னு தோணுது தாத்தா” என்றாள்

   

”எந்த ஆபத்தும் வராதும்மா நீ தைரியமா இருக்கலாம் இங்க இருக்கறவங்க மனசு சுத்தமானது”

   

“வீடு ரொம்ப விசாலமாயிருக்கு தாத்தா அதே மாதிரி இங்க இருக்கறவங்க மனசும் விசாலமா இருந்தா போதும் தாத்தா 1 மாசம் என்ன என் வாழ்க்கை முழுக்க நான் இங்க தைரியமா வாழ்ந்து காட்டுவேன்” என்றாள். நந்தினியின் இந்த பதிலால் தாத்தாவிற்கு ரிஷியை நினைத்து பெருமையாக இருந்தது

   

”உன் அப்பா அம்மா வரலையாம்மா”

   

“என் அப்பா அம்மா பாட்டி எல்லாரும் இறந்துட்டாங்க தாத்தா எனக்குன்னு இருக்கற ஒரே உறவு என் அண்ணன் அர்ஜூன்தான் அதனாலதான் நான் அவரை கூட்டிட்டு இங்க வந்திருக்கேன்”

   

“நீ தனியாவே வந்திருக்கலாமே என்ன பயம் வேண்டியிருக்கு இதுக்காக உன் அண்ணனை 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.