(Reading time: 25 - 49 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

பிசிக்கலா என் மைண்டை டார்ச்சர் செய்யமாட்டீங்கள்ல” என மிருதுளா கேட்க

   

”இங்க இருக்கறவரைக்கும் நீங்க 4 பேருமே எங்க விருந்தாளிகள்தான் எங்க வீட்டு பெண்களாதான் பார்ப்போம் யாரும் யாரையும் டார்ச்சர் பண்ணமாட்டோம் நம்புங்க”

   

”எங்களுக்கு தெரியாத விசயத்தை எங்களுக்கு போட்டியா கொடுத்துட்டா எப்படி செய்றது அதுக்கு யாருடைய உதவியாவது வேணுமே” என வந்தனா கேட்க

   

“அதுக்குதான் சுசித்ரா இருக்காளே அவள்கிட்ட நீங்க தாராளமா உதவி கேட்கலாம் ஆனா அவளை தவிர வேறு யார்கிட்டயும் உதவி கேட்க கூடாது. சந்தேகம் இருந்தா என்னை வந்து கேளுங்க நான் பதில் தரேன் ஆனா எல்லா வேலைகளையும் நீங்கதான் தனியா செய்யனும்”

   

”இந்த வீட்ல இருக்கறவங்களை நாங்க கேவலப்படுத்தமாட்டோம் ஆனா எங்களை யாராவது கேவலமா நடத்தினா என்ன செய்றது எங்க வேலைகளை செய்ய விடாம தடுத்தா என்ன செய்றது தாத்தா” என நந்தினி கேட்கவும்

   

”அப்படியாரும் நடந்துக்க மாட்டாங்க யாராவது உங்களை வேலை செய்யவிடாம தடுத்தா என்கிட்ட சொல்லுங்க அவங்களை கண்டிக்க வேண்டியது என் வேலை நான் பார்த்துக்கறேன். யார் என்ன செஞ்சாலும் சரி என்ன சொன்னாலும் சரி உங்களுக்கு கஷ்டமாயிருந்தாலோ பிடிக்காம போனாலோ நீங்களே கூட அவங்க கிட்ட பேசலாம் ஆனா சண்டை போடகூடாது பேசி புரிய வைக்க பாருங்க முடியலைன்னா என்கிட்ட சொல்லுங்க நான் பேசற விதத்தில பேசி சரிசெய்றேன்”

   

”யாருக்கும் பாராபட்சம் காட்டக்கூடாதுன்னு சொல்லிட்டீங்க இப்ப எங்க சக போட்டியாளர்கள் கிட்ட நாங்க அட்ஜஸ்ட் பண்ணி விட்டுக்கொடுத்து போனால் என்னால எப்படி ஜெயிக்க முடியும்” என்றாள் சோனா

   

”நான் சொன்னது நான் கொடுக்கற வேலையை நீங்க போட்டியா நினைச்சி செய்ங்க மத்த நேரத்தில சக போட்டியாளர்களிடம் நீங்க நட்பா கூட பழகலாம் ஆனா போட்டியில யாருக்காகவும் விட்டுக்கொடுக்க வேணாம் அட்ஜஸ்ட் செய்ய வேணாம்” என்றார் தாத்தா

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.