“ஏன் நந்தினி இவ்ளோ நேரம் எடுத்துக்கிட்டா”
”இது அவளோட வாழ்க்கைண்ணா சட்டு புட்டுன்னு முடிவு எடுக்க முடியுமா அவளோட எல்லா உறவுகளும் அவளை விட்டு போனதால புதுசா வர்ற உறவாவது தனக்கு நிலைச்சி இருக்குமான்னு நினைச்சி பயந்திருப்பா. அந்த காரணத்தாலதான் யோசிச்சி யோசிச்சி முடிவு எடுக்க லேட்டாகிட்டா இனி அவள் மாறமாட்டா அவள் உங்களுக்குதான்”
“எப்படிடா இந்த போட்டியில அவள் ஜெயிக்கனுமே”
”இதப்பாருண்ணா இந்த போட்டியே வெறும் பேச்சுக்குதான் வீட்ல இருக்கறவங்க வாயை அடைக்கதான் நந்தினிதான் ஜெயிப்பா அவளுக்கு நீங்கதான் உறவே உங்க மூலமாதான் நான் கிடைச்சேன் அதனால இந்த உறவை காப்பாத்திக்க அவள் போராடுவா அப்படி அவளால ஜெயிக்க முடியாம போனா என்ன லவ் மேரேஜ் பண்ணிடுங்க”
“ரிஜிஸ்டர் மேரேஜ்தானே அதுக்காக 1 மாசம் காத்திருக்கனுமா நாளைக்கே பண்ணிட்டா என்ன”
“ஒண்ணும் வேணாம் தாத்தா மானத்தை கப்பலேத்திடாதீங்க அவர் நந்தினி கேட்ட கேள்விக்கு சொன்ன பதிலை பார்த்தீங்கள்ல எப்படியிருந்தாலும் அவரு அவளுக்கு நல்லதுதான் செய்வாரு. நீங்களும் அவளைத்தான் ஆசைப்படறீங்கன்னு தாத்தாவுக்கு நல்லாவே தெரியும் உங்க ரெண்டு பேருக்கும் அவர் கெடுதல் செய்யமாட்டாரு.
எனக்கு உங்களைவிட தாத்தா மேலதான் நம்பிக்கை அதிகம் அந்த நம்பிக்கையால அவளை விட்டுட்டு போறேன் அப்புறம் இன்னொரு விசயம் அவள் முன்னாடி மத்த பொண்ணுங்களோட ரொமான்ஸ் பண்றது பேசறதுன்னு எதையாவது சேட்டை செஞ்சி அதனால அவள் கஷ்டப்பட்டாள்னு வைங்க நான் கூட்டிட்டு போயிடுவேன் இப்பவே சொல்லிட்டேன் ஒழுங்கா நந்தினிக்கு வரப்போற கணவனா வாழப்பாருங்க மத்த பொண்ணுங்களை கூட நீங்க ஏறெடுத்து பார்க்ககூடாது சரியா”
“சரிடா”