(Reading time: 25 - 49 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

பார்த்து சிரித்துவிட்டு

   

”குட் நைட் அத்தான்” என்றாள் அதற்கு அவனும்

   

”குட்நைட்” என்றவன் ஆசையாக அவளிடம் நெருங்கவும் அர்ஜூன் அவனை தடுக்கவும் அதைப்பார்த்து முறைத்தான் ரிஷி. நந்தினியும் இவர்களது சண்டையை பார்த்துவிட்டு சிரித்துவிட்டு நேராக தன் அறைக்கு வந்தவள் தனக்காக ஒதுக்கியிருந்த கட்டிலில் சென்று அமர்ந்தாள். மற்றவர்கள் அனைவரும் உறங்கிக்காண்டிருக்க அவளுக்கு இந்த 1 மாசமும் இங்கு நடக்கும் போட்டியை நினைத்து மனதிற்குள் புதிதாக ஒரு அச்சம் பிறந்து அவளது உடல் நடுங்க ஆரம்பித்தது. அப்படியே மெத்தையில் படுத்தவள் விட்டத்தை பார்த்து யோசிக்கலானாள்.

   

”எனக்கு அத்தான் வேணும் அவருக்காக நான் என்னவேணும்னாலும் செய்வேன் ஆண்டவா எனக்கு துணையா இருப்பா. எனக்குன்னு இருந்த எல்லா உறவுகளையும் நீயே எடுத்துக்கிட்ட கிடைச்ச இந்த 2 உறவையும் இழக்க எனக்க மனசு வரலை உன்னால அவங்க என்னை விட்டு போயிட கூடாது ப்ளீஸ்” என வேண்டிக்கொண்டு உறங்கலானாள்.

   

கீழே ரிஷியும் அர்ஜூனும் போர்டிகோவில் நின்று பேசிக்கொண்டிருந்தனர்.

   

”ஏண்டா லேட்டா வந்த நேரம் ஆக ஆக எனக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துடும் போல ஆயிடுச்சி” என்றான் ரிஷி

   

“நீங்க வேறண்ணா உங்களை விட எனக்குதான் பயமே. நான் காலையில சீக்கிரமா எழுந்து 7 மணிக்கே ஹாஸ்டல் முன்னாடி நின்னுட்டேன் அப்போ இருந்து நான் அவளுக்காக காத்துக்கிட்டே இருந்தேன் அவளுக்கும் போன் பண்ணி சொல்லிட்டேன் வெளிய தான் இருக்கேன் எதுவாயிருந்தாலும் சீக்கிரமா முடிவு எடுன்னு அவளும் சரின்னு சொன்னா நேரம் ஓடி ஓடி சரியா 5 மணிக்கு வெளிய வந்து எனக்கு அத்தான்தான் வேணும்ன்னு சொல்றா சரின்னு அந்நேரம் அவசரமாக அவளோட லக்கேஜை அவள் பேக் பண்ணி நான் வார்டன் கிட்ட ரூமை காலி பண்ண வைச்சி அவளை கூட்டிட்டு காரில ஏறி வந்தா வர்ற வழியில ஏகத்துக்கும் டிராபிக். வண்டியை சீக்கிரமா ஓட்டிக்கிட்டு சரியான நேரத்துக்கு கூட்டிட்டு வர்றதுக்குள்ள பாதி செத்து பொழச்சேன் அண்ணா”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.