(Reading time: 25 - 49 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

   

”நான் செய்றத காபி பண்ணி மத்தவங்க செஞ்சி அதனால என்னோட மார்க் பறிபோனா என்ன செய்றது தாத்தா” என்றாள் மிருதுளா

   

”நீங்க 4 பேருமே நாலுவிதமானவங்க உங்களால இன்னொருத்தர் மாதிரி எப்பவுமே ஆக முடியாது இந்த கவலையே உங்களுக்கு வேணாம்”

   

”இந்த போட்டியில என்னால முடிஞ்சத செஞ்சும் மத்தவங்களால நான் தோத்து போகற நிலைமை வராது எனக்கு என் மேல நம்பிக்கையிருக்கு நான் கண்டிப்பா ஜெயிப்பேன் இருந்தாலும் ஒருவேளை என்னால ஜெயிக்க முடியலைன்னாலும் அத்தான் மேல ஆசைப்பட்டு உங்க கிட்ட வந்து நான் கெஞ்சிக் கேட்டா எனக்கு அத்தானை தருவீங்களா தாத்தா” என நந்தினி உருகி கேட்கவும் மற்ற பெண்கள் அதிர்ந்து நந்தினியை பார்த்து முறைக்க அதைக் கவனித்த தாத்தா சிரித்துவிட்டு

   

”உனக்கு ரிஷியை பிடிச்சிருக்குன்னு இப்ப நீ சொன்னதை வைச்சே நான் புரிஞ்சிக்கிட்டேன். நீ நிஜமாவே அவனை ஆசைப்பட்டா அந்த ஆசையே உன்னை இந்த போட்டியில ஜெயிக்க வைக்கும் நீ பயப்படாத என்கிட்ட வந்து கெஞ்சி கேட்கற நிலைமை வராது அப்படி ஒருவேளை முடியாத பட்சத்தில ரிஷிக்கு வேற யாரையாவது நான் தேர்ந்தெடுத்தாகூட நீ கவலைப்படாத எப்படியிருந்தாலும் உனக்கு நான் நல்லதுதான் செய்வேன் அது எப்படின்னு உனக்கு இப்ப புரியாது நடக்கறப்ப புரியும் இப்ப உன் போட்டியில கவனத்தை செலுத்து சரியா” என சொல்லவும் அவளும் அமைதியாக தலையாட்டி ரிஷியை பார்த்தாள். 

   

ரிஷிக்கு நந்தினியின் எண்ணம் வெளிப்படையாக அனைவர் முன்பும் சொல்லியவிதம் கண்டு மகிழ்ந்தான்.

   

வேறு எந்த கேள்விகளும் வராத பட்சத்தில் தாத்தா அனைவரையும் எழுப்பி சாப்பிட அழைத்துச்சென்றார். சாப்பிட்டு முடித்த கையோடு அனைவரும் அவரவர்கள் அறைக்கு செல்ல அர்ஜூன் நந்தினியிடம்

   

”நந்தினி நீ நினைக்கற மாதிரி இது ஸ்கூல்ல நடக்கற போட்டி கிடையாது. இந்த பணக்கார 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.