வீட்டுக்கு வரப்போற மருமகளுக்கான போட்டி எப்படி வேணும்னாலும் நடக்கலாம் கஷ்டமாவும் இருக்கலாம் என்னாலயும் இந்த 1 மாசம் இந்த வீட்டுக்குள்ள வரமுடியாது நான் வந்தா உனக்கு நான் உதவறதா சொல்லி உன்னை விரட்டிடுவாங்க அதனால நான் வரலை ஆனா கவலைப்படாத தாத்தா இருக்காரு சித்தியிருக்காங்க அவங்க ரெண்டு பேரும் உன்னை நல்லா பார்த்துக்குவாங்க” என அவன் சொல்லும் போதே ரிஷி வந்தான்.
”நானும்தான் இருக்கேன் நான் பார்த்துக்க மாட்டேனா” என ஆசையாக சொல்ல
”அண்ணா வேணாம் தாத்தாவை நம்பி நான் என் தங்கச்சியை விடறேன் உங்களை நம்பினா அவளை நீங்க ஏமாத்திடுவீங்க நீங்க தள்ளியே இருங்க போட்டி முடியட்டும் அப்புறம் பேசிக்கலாம்”
“நான் எதையும் செய்யமாட்டேன்டா அவளே என்னை பிடிச்சி போய்தானே நான் வேணும்னு வந்திருக்கா அப்புறம் என்ன”
“அது வேற இது வேற அவள் வந்துட்டாளேங்கறதுக்காக அவள்கிட்ட தப்பு பண்ண பார்க்காதீங்க நான் ஏற்கெனவே அவள்ட்ட சத்தியம் வாங்கிட்டுதான் கூட்டிட்டு வந்தேன் என்னை அவள் ஏமாத்த மாட்டா அவளை நீங்க வற்புறுத்த நினைச்சீங்கன்னு எனக்கு தெரிஞ்சா உடனே வந்து அவளை கூட்டிட்டு போய் அந்த கௌதமுக்கு கட்டிவைச்சிடுவேன் அவன் வேற தினமும் எனக்கு போன் பண்ணி தொல்லை பண்றான் ஏதோ கையில பையனை வெச்சிக்கிட்டு எதுக்கு வெளிய தேடனும்னு நினைச்சிதான் பரிதாபப்பட்டு இவளை இங்க கூட்டிட்டு வந்தேன். நீங்க ஏடாகூடாமா எதையாவது செஞ்சீங்க அப்புறம் நடக்கறதே வேற” என மிரட்டவும் அதை பற்றி கவலைபடாமல் ரிஷி ஆசையாக நந்தினியைப் பார்த்தான். அதைப்பார்த்து பதட்டமடைந்த அர்ஜூன்
”நந்தினி என்கிட்ட சத்தியம் பண்ணியிருக்க சத்தியத்தை மீறக்கூடாது சரியா இப்ப டைம் ரொம்ப ஆயிடுச்சி நீ போய் தூங்கு தாத்தா சொன்ன மாதிரியே காலையில 8 மணியிலிருந்து நைட் 10 வரைக்கும் உலாத்து 10 மணிக்கு உன் ரூம்க்கு போயிடனும் அதுக்கு மேல யார் என்ன சொன்னாலும் சரி எங்க கூப்பிட்டாலும் சரி வெளியே போக கூடாது யாரையும் கிட்ட சேர்க்க கூடாது புரியுதா” என சொல்லவும் நந்தினியும் சரியென தலையாட்டிவிட்டு ரிஷியை