(Reading time: 33 - 65 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

   

“ஆமாம் அதைப்பத்தி வந்தனாவுக்கு கவலையில்லை அவள் டிபன் செய்ய ஓடிட்டா”

   

”ஓ சரி நான் போய் அவருக்கு சூடா காபியோட வரேன்” என சொல்லிவிட்டு கிச்சனுக்குள் சென்றாள்.

   

அவள் சென்ற 5 நிமிடத்தில் தாத்தாவிடம் வந்த ரிஷி ஆறிப்போன காபியை எடுக்க தடுத்தார் தாத்தா

   

”அது ஆறிடுச்சி”

   

“ம் தெரியுது. இப்படியே வெச்சிட்டு போயிட்டாளே எனக்கு ஆறியிருந்தா பிடிக்காதே சரி நான் போய் வேற காபி போட்டுக்கறேன்”

   

“இருடா உனக்காக நந்தினி காபி போட்டு கொண்டு வர போயிருக்கா”

   

என சொல்ல உடனே முகம் மலர்ந்த ரிஷியும் அந்த காபி கப்பை வைத்துவிட்டு தன் அறையை நோக்கி சென்றான்.

   

அதை சந்தேகமாக பார்த்த தாத்தாவும் என்ன நடக்கறது என வேடிக்கை பார்த்தார். நந்தினியும் ரிஷிக்காக ஸ்பெஷல் காபி போட்டுக்கொண்டு வந்து நேராக தாத்தா இருந்த ஹாலை தாண்டி ரிஷியின் அறைக்கு சென்றவள் 10 நிமிடம் கழித்து வெட்கப்பட்டுக்கொண்டே வெளியே வந்து கிச்சனை அடைந்தாள். அவளின் நடவடிக்கையை கண்ட தாத்தா உடனே அர்ஜூனுக்கு போன் செய்தார்.

   

”ஹலோ”

   

”ரிஷியை என்னென்னு  கேளு அவன் ரூமுக்கு உன் தங்கச்சி காபி கொண்டு போய் கொடுத்தா 10 நிமிஷம் கழிச்சி திரும்பி வெட்கப்பட்டுக்கிட்டு வர்றா இதுக்கு மேல சொல்ல ஒண்ணும் இல்லை புரிஞ்சிக்க” என முக்கியமான ஒன்றை மட்டும் சொல்லிவிட்டு போனை 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.