(Reading time: 33 - 65 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

வேணும்னாலும் யாரை வேணாலும் பயன்படுத்திக்குவா அவங்க சொல்றதை செய்வா அருந்ததி சொன்னாள்ன்னு நமக்கு காபி தராம அவள் வேலையை முடிச்சி கொடுத்தாளே அப்பதான் நான் கவனிச்சேன். சமையல் செஞ்சி அனைவரும் சாப்பிட்டு அவளை பாராட்டனும்னு அவள் எதிர்பார்க்கறா

   

அதனாலதான் நிறைய டிஷ்களை செஞ்சி போட்டா மத்த பொண்ணுங்களை விட என்னால ஒரே நேரத்தில நிறைய வேலைகளை செய்ய முடியும்னு அவள் நிரூபிக்க பார்க்கறா அவளை பொருத்தவரைக்கும் வந்த பொண்ணுங்களை விரட்டற எண்ணம் கிடையாது. அவள் செய்ற செயல்களால நான் கவர்ந்து போய் மத்த பெண்களை நானே விரட்டனும்னு நினைக்கறா. பணிவா அடக்கமா இருக்கறது ஒரு தற்காப்புதான். வெகுளித்தனம்ங்கறது அவளோட எண்ணங்களை மறைக்கறதுக்கு ஒரு கேடயமா பயன்படுத்தறா. அருந்ததியை விட வந்தனா மேல ஜாக்கிரதையா இருக்கனும். 

   

நந்தினி வேற அவளுக்கு சொந்தங்கள் யாருமில்லாததால இந்த வீட்டை தன் வீடாவும் இங்க இருக்கறவங்களை தன்னுடைய மனுஷங்களாவும் நினைக்கறா அவளுக்கு பயம் பாதியிருந்தாலும் நீயிருக்கேங்கற தைரியத்தில கொஞ்சம் அசால்டா இருக்கா அது சரியில்லை இப்படியே போனா தோத்துடுவா” என சொல்லவும் ரிஷிக்கு பக்கென்றது.

   

மணி 9.30 என காட்டவும் அனைவரும் டைனிங் ஹாலுக்கு வந்து சேர்ந்தார்கள். முதலில் சோனா தாத்தாவிடம் வந்து வெஜிடபிள் வித் நூடுல்ஸ் சூப் வைத்தாள். அதை அவர் சாப்பிட்டு 

   

”ம் நல்லாயிருக்கும்மா இது ஒண்ணுதான் செய்தியா”

   

“ஆமாம் தாத்தா காலையில எவி புட் உங்களால சாப்பிட முடியாதுன்னு சொன்னீங்கள்ல அதான்”

   

“அதுக்காக வெறும் சூப்பா நீ செய்வ வேற ஏதாவது டிஷ் செய்திருக்கலாமே”

   

“செய்திருப்பேன் தாத்தா ஆனா நீங்க மிச்ச பொண்ணுங்களோட டிஷ்ஷூம் சாப்பிடனுமே அதனாலதான்”

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.