இருக்கு பாரு. நீ என்ன பண்ற மத்தவங்களுக்கு இதை பரிமாற வேணாம் மிச்சம் இருக்கறத கொண்டு போய் வைச்சிடு நல்லா ஊறட்டும் மதியமா சாப்பிடலாம்”
“அய்யோ தாத்தா நான் தப்பு பண்ணிட்டேனா”
என அவள் வருத்தப்படுவதைப் பார்த்து இது நடிப்பா இயல்பா என சந்தேகித்த தாத்தா உடனே அவளிடம்
”அட இல்லைம்மா இல்லை நல்லாதான் இருக்கு ஆனா இன்னும் ஊறலை அவ்ளோதான் மதியம் சாப்பிட்டுக்கலாம் ஒண்ணும் வேஸ்ட்டாகாது அடுத்து அந்த தோசையை வைம்மா” என சொல்ல அவளும் தோசையை வைத்தாள் கூட சட்டினியும் சாம்பாரும் வைத்தாள். அதை சாப்பிட்டவர்
”ரொம்ப நல்லாயிருக்கும்மா எல்லாருக்கும் பரிமாறு” என சொல்ல அவளும் பரிமாறினாள்.
அடுத்து மிருதுளா வெள்ளி என்றும் பாராமல் கிரில்டு பிஷ்ஷூம் அதற்கு தோசையும் செய்திருந்தாள்.
”என்னம்மா இது வெள்ளிக்கிழமை அதுவுமா நான்வெஜ் பண்ணியிருக்க”
“எனக்கு நான்வெஜ்தான் நல்லா வரும் நான்வெஜ் இல்லைன்னா என்னால சாப்பிட முடியாது”
“ஆனா இந்த வீட்ல வெள்ளி சனி மற்றும் முக்கியமான பூஜை நாட்கள்ல இப்படி நான்வெஜ் சாப்பிடமாட்டாங்க சரி எனக்கு வைக்காத வேற யாராவது சாப்பிடறாங்களான்னு கேட்டு வை” என சொல்லிவிட்டு அருந்ததியை பார்த்தார்
”என்ன அருந்ததி நீ கூட்டிட்டு வந்த பொண்ணுகிட்ட நம்ம வீட்டு ஆச்சாரங்களைப்பத்தி சொல்லலையா என்ன நீ கூட்டிட்டு வந்ததால அவள் என்ன செய்தாலும் நான் சரின்னு சொல்லிட மாட்டேன் புரியுதா”