(Reading time: 13 - 26 minutes)
Vidukathaiyaay intha vazhkkai
Vidukathaiyaay intha vazhkkai

தொடர்கதை - விடுகதையாய் இந்த வாழ்க்கை - 15 - சசிரேகா

   

றுநாள் காலையில் தருண் ரயில்வே ஸ்டேஷனில் நின்றிருந்தான் ஹரிணிக்காக காத்திருந்தான் ஹரிணியும் பலத்த யோசனையுடன் வந்தாள் 

   

”வாம்மா பத்தினி தெய்வமே வா வா என்ன ரெடியா கோர்ட்டுக்கு போக பயமாயிருக்கா என்ன“

   

”வாயை மூடு” என்றாள் கோபமாக

   

”ஓ சரி சரி எப்படியும் இன்னியோட நம்ம வாழ்க்கை கதை முடிஞ்சிடும்ல”

   

”ப்ச் அதிகமா பேசாத, எதுக்காக ரயில்வே ஸ்டேஷன் வரச் சொன்ன, உன்கிட்ட வண்டியில்லையா”

   

”இருக்கு இருந்தாலும் நாம சந்திச்ச இந்த ரயில் பயணத்திலயே நாம பிரியனும்னு ஆசைப்பட்டுதான் உன்னை இங்க வரவழைச்சேன்”

   

”உன்னை என் வாழ்க்கையில சந்திக்காமலே இருந்திருக்கலாம்”

   

”என்ன செய்றது சில சமயம் எல்லாமே இயல்பா நடந்துடும், அதை தடுக்கவோ விலக்கவோ நம்மால முடியாது இதெல்லாம் விதி“

   

”விதியை என் மதியால மாத்திக் காட்டறேன்”

   

”எப்படி கோர்ட்ல நீ உத்தமின்னு சொல்லி வாதாடப்போறியா வாய்ப்பே இல்லை, என்கிட்ட ரிசல்ட் இருக்கு நீ வசமா மாட்டிக்கிட்ட”

   

”நிறுத்துடா என்கிட்ட உண்மையிருக்கு நீதான் என்கிட்ட வசமா மாட்டிக்கிட்ட, இந்த நாள்தான் உன்னோட கடைசி நாள்” 

   

”ஓ சாபம் விடறியா அடிப்போடி பத்தினி, தர்ற சாபமே பலிக்க மாட்டேங்குது நீயெல்லாம் சாபம் தந்தா அது பலிச்சிடுமா போடி போடி” என்றான் எகத்தாளமாக 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.