(Reading time: 13 - 26 minutes)
Vidukathaiyaay intha vazhkkai
Vidukathaiyaay intha vazhkkai

மருத்துவ பெண்மணியை அழைத்து வர அவளைக் கண்டதும் தருணின் முகத்தில் ஈயாடவில்லை. அந்த மருத்துவரின் கையில் அவரின் குழந்தை இருப்பதைக் கண்டதும் அவனின் இதயமே தடதடவென அதிர்ந்தது

   

”இது இது எப்படி” என குழந்தையை காட்டி பேச அதற்கு பதில் ஹரிணி சொல்லவில்லை அந்த மருத்துவரே சொன்னார்

   

”படுபாவி என் குழந்தையை யாருமில்லாத அநாதை ஆசிரமத்திலயா விட்டு வைப்ப, நல்லவேளை ஹரிணியால என் குழந்தை எனக்கு கிடைச்சது, எனக்கு நீ செய்த துரோகத்துக்கு கண்டிப்பா நீ தண்டனை அனுபவிப்ப, நானே உனக்கு எதிரா சாட்சி சொல்றேன் நிவேதினி விசயத்தில என்ன நடந்தது, பவானி விசயத்தில என்ன நடந்ததுன்னு எல்லா விவரமும் எனக்கு நல்லாவே தெரியும், கோர்ட்ல உன்னைப் பத்தின எல்லா விசயத்தையும் ஒண்ணுவிடாம சொல்லி உனக்கு தண்டனை வாங்கித் தராம நான் ஓயமாட்டேன்” என பொங்கி எழ தருணுக்கு கதிகலங்கிப் போனது, வசமாக மாட்டிக் கொண்டான்.

   

ஹரிணியோ அவனின் நிலைமையைக் கண்டு சிரித்தாள்

   

”மாட்டினியா இரு போலீஸ்க்கு போன் பண்ணி உன்னை கைது செய்ய வைக்கிறேன், கோர்ட்ல என்கிட்ட இருக்கற வீடியோ ஆதாரத்தையும் இதோ இந்த டாக்டரோட வாக்குமூலமே போதும், நீ செய்த அநியாயத்துக்கு தண்டனை கிடைச்சிடும், இளங்கோ, பவானி, நிவேதினி இவங்களுக்கு நடந்த அநியாயத்துக்கு நியாயம் கிடைக்கும், நீ தண்டிக்கப்பட்டாதான் இறந்துப் போனவங்களோட ஆத்மா சாந்தியாகும், எனக்காக இல்லைன்னாலும் அவங்களுக்காகவாவது நான் உன்னை ஜெயில்ல தள்ளதான் போறேன்” என சொல்ல அவனுக்கு கோபம் ஆத்திரம் கண்ணை மறைத்தது

   

”ஏய் நீ உயிரோட இருந்தாதானே என்னை ஜெயில்ல தள்ளுவ, உன்னை கொல்லப் போறேன் பாரு” என சொல்லிக் கொண்டே வேகமாக ஹரிணியை நெருங்க அவளோ சட்டென விலகி நின்றதால் தருண் தடுமாறி ரயிலை விட்டு வெளியேறி கீழே விழுந்து இறந்தான்.

   

கதை சொல்லி முடித்ததும் அந்த நீதிமன்றமே அமைதியாகிவிட்டது. அதுவரை அவளை குற்றவாளியாக பார்த்த இன்ஸ்பெக்டர் மதியழகி கூட தன் தவறை உணர்ந்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.