கொல்லும் உரிமை இவருக்கு கிடையாது, ஒரு உயிரை பறிப்பது தவறு, அதற்கான தண்டனையை ஹரிணிக்கு தர வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்” என பேசி முடித்து தன் இருக்கையில் அமர்ந்தார்
ஹரிணிக்கு எந்த கலக்கமும் இல்லை மனம் நிம்மதியாக இருந்தது, இளங்கோவிற்கு நியாயம் தந்துவிட்ட மகிழ்ச்சியில் எந்த தண்டனையானாலும் ஏற்றுக் கொள்ளலாம் என்ற முடிவெடுத்து தயாராக இருந்தாள்
ஜட்ஜ் கூட வக்கீலின் வாதத்தைக் கேட்டு சற்று குழம்பி போனார். ஹரிணிக்கு தண்டனை தரலாமா வேண்டாமா என்ன தீர்ப்பு வழங்குவது என தெரியாமல் குழப்பத்துடன் இருக்க அதே நேரம் அவசர அவசரமாக மதியழகியுடன் இருக்கும் கான்ஸ்டபிள் பெண் முன் வந்தார்
”மன்னிக்கனும் ரயில்ல நடந்த சம்பவத்தை அதுல பயணம் செய்த ஒருத்தன் வீடியோ எடுத்து வைச்சிருக்கான், அதை எல்லாரும் பார்க்கனும்” என சொல்ல ஜட்ஜ் முதல் அனைவருமே ஆர்வமானார்கள்.
வீடியோ ஓடியது அதில் அப்பட்டமாக தெரிந்த விசயம் தருண் வேண்டுமென்றே ஹரிணியை தாக்க வந்ததும், அவனிடம் இருந்து தப்பிக்க எண்ணி ஹரிணி விலகியதும் தருண் அவனாகவே தடுமாறி ரயிலில் விழுந்து இறந்ததும் தெள்ளத்தெளிவாக இருந்தது, அதைக் கண்டதும் ஹரிணிக்கு நிம்மதியானது. வக்கீலுக்கு பேச்சே எழவில்லை ஜட்ஜ் கூட வக்கீலிடம்
“இதுக்கு என்ன விளக்கம் சொல்லப்போறீங்க” என கேட்க வக்கீலோ கை விரித்தார்
”ஒரு தப்பானவனுக்கு தண்டனை கிடைச்சிடுச்சி, அவன் தப்பானவன்னு நிரூபிச்ச ஹரிணியை தண்டிக்கறது அதர்மம், கிடைச்ச ஆதாரமும் சாட்சியும் அடிப்படையா கொண்டு ஹரிணி மேல எந்த தப்பும் இல்லைன்னும், அவங்களுக்கு நடந்த அநியாயத்துக்கு நியாயம் கிடைக்க நடத்திய போராட்டத்துக்கு அவங்களை இந்த நீதிமன்றம் பாராட்டுக்கிறது ஹரிணி, நிரபராதி என இந்த நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது” என சொல்லி முடித்தார் ஜட்ஜ்
ஹரிணியோ அனைத்து பிரச்சனைகளும் முடிந்த நிலையில் நிம்மதியான ஒரு புன்னகை வீசினாள். மறுபடியும் அதே ரயில் பயணம், இம்முறை அவளின் மனதில் அப்படியொரு