ஒத்துக்கறோம் அதுக்கான ஆதாரத்தை இந்த நீதிமன்றம் ஏத்துக்குது, அது இருக்கட்டும் இப்ப விசயம் என்னன்னா நீங்க தருணை கொன்னதுதான் இங்க பிரச்சனையே”
”சார் நான் கொல்லலை என்னை காப்பாத்திக்க அப்படி செய்ய வேண்டியதா போச்சி”
”இல்லை வேற ஏதோ விசயம் இருக்கு அதை நீங்க சொல்லாம விட்டுட்டீங்க, எங்க தருண் மாட்டிக்கிட்டா கூட நீங்களும் மாட்டிக்குவீங்கன்னு நினைச்சிருக்கலாம், என்னதான் ஆதாரம் இருந்தாலும் அது பொய்யுன்னு தருண் நிரூபிச்சிடக் கூடாதுன்னு நினைச்சிருக்கலாம், அவரை நீங்க கல்யாணம் செய்ததே பழிவாங்கதானே, நீங்க சொன்ன கதையில நான் நல்லா கேட்ட ஒரு விசயம் பவானிக்கு நடந்த மாதிரியே அவனுக்கும் நடக்கனும்னு நீங்க ஆசைப்பட்டிருக்கீங்க ஆசைப்பட்டபடியே செய்தும் முடிச்சிட்டீங்க, அவரை தள்ளிவிட்டு கொன்னுட்டீங்க இதுதானே உண்மை” என வக்கீல் சொல்ல அரண்டுப் போனாள் ஹரிணி
”நீங்க தருணை விட மோசமானவனா இருக்கீங்களே சார், ஆம்பளைங்க எல்லாரும் இவ்ளோதானா தப்பு செய்தவனை விட்டுட்டு நல்லவளை தண்டிக்கலாமா”
”இதப்பாருங்க நான் ஒண்ணும் தருண் செய்தது நியாயம்னு சொல்ல வரலை நீங்க செய்தது தப்புன்னு சொல்ல வரேன்“
”சரி இப்ப என்ன சொல்ல வர்றீங்க எனக்கு தண்டனை தரப்போறீங்களா, தருண் ஒண்ணும் நல்லவன் இல்லை அவன் ஒரு அயோக்கியன் துரோகி அவன்லாம் மனுஷனே கிடையாது, அவன் செத்ததுதான் நல்லது, இல்லைன்னா இன்னும் பல பெண்களோட வாழ்க்கையை அழிச்சிருப்பான், அவன் ஒரு மிருகம், அந்த மிருகம் இறந்தது இப்ப உங்களுக்கு கஷ்டமாயிருக்கா இப்ப என்ன அவன் இறப்புக்கு நான் காரணம்னு சொல்ல வர்றீங்களா சரி அப்படியே இருக்கட்டும், நான்தான் அவனை பிடிச்சி தள்ளிவிட்டு கொன்னேன், நான்தான் கொலையாளி உங்களால என்னை தண்டிக்க முடியுமா சரி தண்டனை கொடுங்க நான் மனசார ஏத்துக்கிறேன்” என சொல்ல வக்கீலோ ஜட்ஜ் முன்
”பார்த்தீங்களா யுவர்ஆனர் குற்றவாளியே உணர்ச்சி வசப்பட்டு உண்மை வெளி வந்த பின்பு தான்தான் குற்றவாளி என ஒப்புக் கொண்டார். தருண் கெட்டவனாகவே இருந்தாலும் அவனை