(Reading time: 13 - 26 minutes)
Vidukathaiyaay intha vazhkkai
Vidukathaiyaay intha vazhkkai

நிம்மதி, இளங்கோ, நிவேதினி, பவானிக்கு நியாயம் கிடைத்துவிட்டது என்ற உணர்வு அவளை மகிழ வைத்தது, ஒரு வித மன திருப்தியுடன் அப்பாடா என இருந்தாள்

   

தருண் இறந்தபடியால் அவள் இப்போது விதவையானாள் ஆனால் உண்மையில் தருணை அவள் திருமணம் செய்த போதும் சரி அவனுடன் வாழ்ந்த 6 மாதங்களிலும் சரி அவனை கணவனாக கூட அவள் நினைக்கவில்லை, எப்போதும் இளங்கோவின் மனைவியாகவே வாழ்ந்தாள், தருணுக்கு நடந்தது இளங்கோவிற்கு நியாயம் கிடைத்தது எண்ணி முகிலனும் மனம் மகிழ்ந்தான்

   

”ஹரிணி நீங்க சாதிச்சிட்டீங்க” என்றான் முகிலன்

   

”என்ன சாதிச்சி என்ன இளங்கோவை இழந்துட்டேனே“

   

”அதையே நினைக்க வேணாம் புதுசா ஒரு வாழ்க்கையை வாழ பாருங்க”

   

”போதும் நான் வாழ்ந்த வாழ்க்கையே, என்னால ஆயுசுக்கும் மறக்கமுடியாத அளவு வடுவா மாறிடுச்சி, இனியும் புதுசா எனக்கு எந்த வாழ்க்கையும் தேவையில்லை முகிலன்“

   

”அதுக்காக இப்படியே தனியா வாழ்ந்துடுவீங்களா”

   

”ஏன் ஒரு பொண்ணால தனியா இந்த உலகத்துல வாழ்ந்து காட்ட முடியாதா என்ன,  நான் வாழ்ந்து காட்டுவேன், ஏன்னா நான் பட்ட அனுபவம் அப்படி நடந்த எல்லாத்தையும் மறந்துட்டு இன்னொரு வாழ்க்கையை சத்தியமா என்னால ஏத்துக்க முடியாது”

   

”அப்படின்னா என்னதான் செய்யப் போறீங்க”

   

”நான் எதுவும் செய்யப் போறதில்லை, என் வாழ்க்கை அது போக்கிலயே வாழப் போறேன், இந்த ரயில் போல வளைஞ்சி நெளிஞ்சி ஓடப்போறேன், மேடு பள்ளத்தில இறங்கி ஏறப் போறேன், இதுக்கு மேல எனக்கு என்ன நஷ்டம் கஷ்டம் வந்துடப் போகுது, எல்லாத்தையும் நான் பார்த்துட்டேன் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.