ஜட்ஜ்கூட ஹரிணியின் கதையால் சற்று குழம்பினார். இந்த கதையை கேட்டபடி இருந்த தருணின் பெற்றோருக்கு பயத்தில் கைகால் நடுங்கியது, தன் மகன் அயோக்கியன் என நன்றாக தெரிந்திருந்தும் அவனது தவறை சுட்டிக்காட்டி திருத்தாமல் விட்டுவிட்டதின் பலனை இப்போது அவர்கள் உணர்ந்தார்கள்.
வக்கீலோ அவளின் கதையை பொறுமையாக கேட்டு முடித்துவிட்டு
”ஹரிணி நீங்க சொன்ன கதை உண்மை போலவே இருந்தது ஆனா, இது உண்மைதானான்னு நான் எப்படி நம்பறது”
”என்கிட்ட ஆதாரம் இருக்கு” என சொல்லி தன்னிடம் இருந்த செல்போன் வீடியோவை காட்டினாள், அதை அனைவருமே பார்த்தார்கள், அடுத்து அந்த மருத்துவரை வரவழைத்தாள், அவரும் அனைத்து உண்மைகளையும் சொல்லி முடித்தாள்
”இருந்தாலும் இதையெல்லாம் வைச்சி ஒரு முடிவுக்கு வரமுடியலையே தப்பு செய்தவன் செத்துட்டான், அவன் செய்த தப்புக்கான ஆதாரங்கள் தந்துட்டீங்க ஓகே ஆனா, அவனை நீங்க ஏன் கொன்னீங்க அவனை போலீஸ்ல பிடிச்சி கொடுத்திருக்கனும்லயா”
”ஆனா அவன் என்னை தாக்க வந்தான் தற்காப்புக்காக அவனை தள்ளிவிட்டேன், அவன் ரயில்ல விழுந்து இறந்துட்டான்” என ஹரிணி சொல்ல வக்கீலோ
”இதைதான் என்னால நம்ப முடியலை, தருண் அயோக்கியன் எல்லா விசயத்தையும் சரியான முறையில ப்ளான் செஞ்சி வந்தவரு, உங்களை கொல்ல வந்தாரா இருக்காது, உங்ககிட்ட இருக்கற ஆதாரத்தை அழிக்க முயற்சி செய்திருக்கலாமே ஏன்னா இந்த ஆதாரங்கள் இல்லைன்னா அவரை உங்களால குற்றம் சாட்ட முடியாதுல்ல”
”நடந்த அனைத்தையும் சொல்லிட்டேன், இப்பவும் நம்பாம இருந்தா எப்படி”
”ஹரிணி நீங்க சொன்னதை நான் நம்பறேன், தருண் கெட்டவன்தான், அயோக்கியன்தான்