”அவளுக்கு என்ன கஷ்டமோ பாவம் குழந்தை வேணும்ங்கற ஏக்கத்துல இறந்துட்டா“
”இதை நான் நம்பனுமா“
”வேற என்ன அவளுக்கு கஷ்டம் இருக்கப் போகுது சொல்லு, நான்தான் அவளை பூபோல பார்த்துக்கிட்டேனே“
“யாரு நீ அவளை பூபோல பார்த்துக்கிட்ட இதை நான் நம்பனுமா“
”இதுக்காக என்ன செத்துப் போன பவானி வந்து சொன்னாதான் நம்புவியா“
”சே சே இதுக்காக ஏன் அவள் வரனும், அவளோட டைரி போதாது”
என சொல்ல அவனோ திடுக்கிட்டான்
”என்ன சொல்ற டைரியா“
”ஆமாம் டைரிதான்“
”என்ன டைரி”
”பவானியோட டைரி கடைசியா பவானி தற்கொலை செய்துக்கிட்டப்ப அவள் தவறவிட்ட டைரி, என் கைக்கு கிடைச்சது” என சொல்ல அவன் அரண்டுப் போனான்
”அதனால என்ன“
”உன்னைப் பத்தி அ முதல் ஃ வரை எல்லாமே அதுல எழுதியிருந்தா, என்ன அவள் சாகற அன்னிக்கு என்ன நடந்ததுன்னு தெரியலை அதுக்கு முதல் நாள் வரை அவள் எல்லா கதையையும் எழுதியிருந்தா“