ஹரிணியோ சுற்றி முற்றி பார்த்தாள், ஒரு ஓரத்தில் தருணால் ஏமாற்றப்பட்ட மருத்துவர் இருக்கவே அவளுக்கு நிம்மதியானது, அந்நேரம் ட்ரெயின் வந்தது அந்த ரயிலைக் கண்டதும் அவளுக்கு தூக்கிவாரிப் போட்டது எந்த ரயிலில் பவானி பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்டாளே அதே ரயில் அவ்விடம் வரவும் தருணோ
”ஓ இந்த ட்ரெயினா இது என்னோட ராசியான ட்ரெயின் வா வா உள்ள போலாம்” என அழைக்க அவளும் சரியென தலையாட்டிவிட்டு வந்தாள். கூடவே அந்த மருத்துவரும் தருணுக்கு தெரியாதவண்ணம் ஏறிக் கொண்டார்.
ரயிலும் புறப்பட்டது ஹரிணிக்கு பதட்டமும் அதிகரித்தது, இன்றோடு இளங்கோ மற்றும் பவானிக்கு நடந்த அநியாயத்திற்கு நியாயம் கிடைக்கப் போகிறது, அதற்காக கோர்ட் வரை செல்ல வேண்டுமா தேவையில்லை இதே ரயில் பயணத்தில் தருணின் உண்மையான முகத்தை நிரூபித்துவிடலாம் என முடிவெடுத்து அவனிடம் நேருக்கு நேராக நின்றாள், அவனோ அவளை இளப்பமாக பார்த்து நக்கலாகச் சிரித்தான்.
”ரயில் பயணம் எனக்கு சுத்தமா பிடிக்கலை” என்றாள் வெறுப்பாக
”ப்ச் இப்படி சொன்னா எப்படி இந்த ரயில் பயணம் எவ்ளோ சுகமானது தெரியுமா, தண்டவாளத்துல வளைஞ்சி நெளிஞ்சி ஒரு நதி போல அது ஓடிக்கிட்டே இருக்கும், யாருக்காகவும் அது நிக்காது யாராவது வந்தா தூக்கி போட்டுட்டு போயிக்கிட்டே இருக்கும், ரயில் கூட ஒரு வகையில நதிதான் ரயில் நதி எப்படியிருக்கு”
”இந்த ரயில் உனக்கு ஞாபகம் வரலையா, இதே ரயில்லதான் பவானி தற்கொலை செய்து இறந்துட்டா”
”ம் தெரியுமே அதனாலதான் இந்த ரயில் எனக்கு ராசியானதுன்னு சொன்னேன்”
”உண்மையை சொல்லு பவானி ஏன் ரயில்ல விழுந்து தற்கொலை செய்துக்கிட்டா“