(Reading time: 33 - 65 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

என சொல்லவும் பாட்டி மிருதுளாவை தன் பக்கம் அழைத்து ஏதோ முனுமுனுத்து அனுப்பிவைத்தார். ஆனால் யாருமே நான்வெஜ் சாப்பிடாத காரணத்தால் மிருதுளா மட்டும் அவள் செய்த உணவை அவளே சாப்பிட ஆரம்பித்தாள்.

   

அடுத்து நந்தினி ஒரு கிண்ணத்தில் இட்லியும் இன்னொரு கிண்ணத்தில் சட்டினியும் சாம்பாரும் வைத்திருந்தாள். அதை முதலில் தாத்தாவிற்கு பரிமாறினாள். அவரும் இட்லியை பிட்டு சட்டினியில் தொட்டு சாப்பிட்டவர்

   

”ம் சட்டினி நல்லாயிருக்கும்மா இப்பதான் வந்தனாவும் இதே சட்னி செய்தா ஆனா அவளோடது விட இந்த சட்னி நல்லாயிருக்கே எப்படி” என அவர் கேட்க அதற்கு சுசித்ரா பதில் சொன்னாள்

   

”மாமா நந்தினி சட்னியை மிக்சியில அறைக்கல அம்மிக்கல்லுல அறைச்சா”

   

”அம்மிக்கல்லா நம்ம வீட்ல ஏது” என பாட்டி கேட்க

   

”இருக்கு அத்தை ரொம்ப வருஷமா பயன்படுத்தாம இருந்திச்சி நான் இந்த வீட்டுக்கு மருமகளா வந்தப்ப கொண்டு வந்தேன். அதுலதான் நானும் சட்னியெல்லாம் அறைச்சேன் எங்க நீங்கதான் வேணாம்னு சொன்னீங்க நானும் விட்டேன் ஆனா இன்னிக்கு நந்தினி கேட்டதும் நானே எடுத்துக்கொடுத்தேன். அவளே சட்னியை அறைச்சி எடுத்தா. 

   

நெய்யில கடுகு கருவேப்பிலை தாளிச்சி சட்னியில கொட்டினா மாமா கிச்சன் முழுக்க அந்த நெய்யோட வாசம்தான் அப்பவே சாப்பிடனும்னு போல இருந்திச்சி. இன்னும் டைம் ஆகலையேன்னு விட்டேன். ஆனா பாருங்க மாமா இவ்ளோ நேரம் ஆகியும் அந்த நெய் வாசம் மட்டும் போகலை பாருங்க” என சொல்ல தாத்தா ரிஷியை சந்தேகமாக பார்க்க அவனோ

   

”நான் எதுவும் சொல்லலை உங்க கூடதானே நான் இருந்தேன்”

   

“ஆமாம் எனக்கும் வாசம் வந்துச்சி நான் வந்தனாதான் ஏதோ செய்றாள் போலன்னு நினைச்சேன் சரி சரி நந்தினி எல்லாருக்கும் பரிமாறு சாப்பிடட்டும்” என சொல்லவும் அவளும் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.