”ஷ் பேசாத இனிமே என் பேச்சை மட்டும் கேளு என்னை தேடி எனக்காக வந்துட்டல்ல அப்புறம் என்ன அண்ணா நொண்ணான்னு அவனை விடு. இந்த 1 மாசம் என்கூட இப்படியே இரு. நாம சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கலாம் சரியா”
“ஆனா அத்தான் தாத்தாதானே முடிவு எடுப்பாரு”
“இது என் வாழ்க்கை இதுல தலையிட தாத்தாவால முடியாது. அதுக்கு அவருக்கு உரிமை கிடையாது” என சொல்ல
”என்னடா சொன்ன” என பின்னாடியிருந்து தாத்தா குரல் கொடுக்க சட்டென அவளை விட்டு திரும்பினான் ரிஷி. அங்கு கோபமாக தாத்தா நின்று இருக்கவும்
”தாத்தா நீங்களா” என்று ஈனஸ்வரத்தில் அழைக்க ரிஷியிடம் நெருங்கி வந்தவர்
”தாத்தாவேதான் என்னடா பண்ற நீ பட்ட பகல்ல இப்படி அவளை கட்டிப்பிடிக்கறியே தப்பில்லையா”
“ஆமா நீங்க மதியமானதும் தூங்க போவீங்கள்ல இப்ப என்ன இங்க எப்படி தூங்கலையா”
“சாப்பிட்டது செரிக்க வாக்கிங் பண்ணலாம்னு தோட்டத்துக்கு வந்தேன்”
“ஓ சரி சரி நீங்க வாக்கிங் போங்க நாங்க உங்களை தொல்லை பண்ணாம தூரமா போய் பேசறோம்”
“முடியாது இப்படி நீ செய்றத பத்தி அர்ஜூன் கிட்ட சொன்னேன்னு வை அப்புறம் இவள் உனக்கு கிடைக்கவே மாட்டா பேசாம போயிரு போடா உள்ளே” என கத்தவும் ரிஷி நந்தினியை சோகமாக பார்த்துவிட்டு வீட்டுக்குள் சென்றான். அவன் சென்றதும் தாத்தாவின் முகத்தை ஏறிட்டு பார்க்க பயந்து போய் தலையை தாழ்த்திக் கொண்டாள் நந்தினி.