(Reading time: 33 - 65 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

”சோனா இதை எப்படிம்மா சாப்பிடறது. இவ்ளோ பெரிசு வாய்க்குள்ள  போகுமா” என கேட்க அதற்கு தினகரன்

   

”தாத்தா இங்க பாருங்க அதை இப்படி சாப்பிடனும்” என டெமோ காட்டினான்.

   

அதைப்பார்த்து பயந்த தாத்தா சோனாவிடம்

   

”அம்மாடி இதை இப்படித்தான் சாப்பிடனுமா பேசாம நான் கொஞ்சம் கொஞ்சமா பிட்டு சாப்பிட்டுமா”

   

“சரிங்க தாத்தா உங்க விருப்பம்” என சொல்லிவிட்டு ரிஷியை பார்க்க அவனோ அதை சாப்பிடாமல் அமைதியாக இருந்தான்

   

”என்னாச்சி ரிஷி சாப்பிடுங்க”

   

“நான் இந்த சான்ட்விச் எல்லாம் சாப்பிடறதில்லை”

   

“நீங்க பாரின்லதானே படிச்சிட்டு வந்தீங்க அங்க இந்த மாதிரியான சான்ட்விச்சுகள் புழக்கத்தில இருக்குமே அப்ப சாப்பிட்டிருப்பீங்களே”

   

“உண்மைதான் நான் படிக்கறப்ப நிறைய இந்த மாதிரி ஐட்டங்கள் சாப்பிட்டு சாப்பிட்டு போர் அடிச்சிடுச்சி திரும்பவும் இதை பார்க்கறப்ப வெறுப்புதான் வருது ப்ளீஸ் என்னை சாப்பிட சொல்லி கட்டாயப்படுத்தாத” என சொல்லிவிட்டு தன்னுடைய சான்ட்விச்சை தினாவுக்கு தர அவன் ஆசையாக வாங்கி சாப்பிட்டான்.

   

அதைப்பார்த்த சோனா முகத்தில் வெறுப்பை வரவழைத்துக்கொண்டு ரிஷியிடம்

   

”என்னை அவமானப்படுத்தறீங்களா ரிஷி”

   

“அப்படியில்லை இப்ப உனக்கு பிடிக்காததை நான் செஞ்சி கொடுத்து சாப்பிட சொன்னா 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.