உனக்கு ஓகேவா சொல்லு சாப்பிடுவியா முடியாதுல்ல அப்படித்தான் இதுவும்”
“ஆனா எனக்கு உங்களுக்கு எது பிடிக்கும்னு தெரியாதே”
”கரெக்ட்தான்மா நான் பாரின்லயே நீ இப்ப சமைக்கறத எல்லாம் சாப்பிட்டு முடிச்சிட்டு நொந்து போய் வந்தவன் திரும்பவும் அதையே சாப்பிட அலுப்பாயிருக்கு அதான்.”
“அப்ப நான் என்னதான் செய்யட்டும்“
“நீ இந்த ஊரு பொண்ணுதானே இங்க இருக்கற மாதிரி சமைச்சி போடு”
”எனக்கு தெரியாதே”
“தெரிஞ்சிக்க கத்துக்க நெட் இருக்கு ஆன்லைன்ல பார்த்து கத்துக்க புது புது விசயங்களை கத்துக்கறதால என்னாயிடப்போற”
“நான் முயற்சி பண்றேன்”
“சந்தோஷம்” என அவன் சொல்லவும் தாத்தா ரிஷியை பார்த்து முறைத்துவிட்டு சோனாவிடம் தன்மையாக
”அம்மாடி அவன் சொல்றதை செய்யாதம்மா இங்கிருந்தவரைக்கும் இந்த வீட்டு சாப்பாடு சாப்பிட்டு போரடிக்குது வெறுப்பாயிருக்குன்னு சொன்னான். பாரின் போனதும் அங்க இருக்கற சாப்பாடு சாப்பிட்டு வெறுப்பாயிருக்குன்னு சொல்றான். அவனுக்காக நீ மாற வேணாம் நீ எப்பவும் போலவே இரு இந்த 1 மாசம் உன்னால முடிஞ்சவரைக்கும் மத்தவங்களுக்கும் பிடிச்ச மாதிரி சமைச்சி போடு. உன்னை கஷ்டப்படுத்திதான் நீ இங்க வேலை செய்யனும்னு அவசியமில்லை சரியா எப்பவும் உன்னை பத்தியே நீ யோசிக்காம அடுத்தவங்களை பத்தியும் யோசி”
“நானும் அப்படித்தானே இருக்கேன் தாத்தா“