(Reading time: 33 - 65 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

   

“தாத்தா அது நான்” என தடுமாற தாத்தா அவளிடம் பொறுமையாக பேசினார்.

   

“பரவாயில்லைம்மா இந்த மாதிரி ஸ்நேக்ஸ் ஐட்டங்களை நீ சாயங்காலம் செய்தா சாப்பிட நல்லாயிருக்கும் இனிமே டின்னர் வந்தா அதுக்கு ஏத்தமாதிரி செய்ம்மா”

   

“ஓகே தாத்தா” என சொல்லிவிட்டு மற்றவர்களுக்கும் பரிமாறிவிட்டு சென்று அமர்ந்தாள். அவள் தந்த பாவ் பாஜியை ரிஷி கருணாவுக்கு கொடுத்துவிட்டான். அதைப்பார்த்த மிருதுளாவுக்கு ஆத்திரமாக வந்தாலும் எதுவும் பேசாமல் அமைதிகாத்தாள்.

   

அடுத்து நந்தினி வந்தாள். இட்லியும் கெட்டி சட்னியும் இட்லிபொடிக்கு நல்லெண்ணெயும், நெய்யும் கொண்டு வந்து பரிமாறினாள். அவள் அம்மியில் அரைத்த காரணத்தால் அந்த சட்னியின் ருசி அமோகமாக இருக்கவே அவர் உடனே

   

”ஆஹா சட்னி சூப்பர்மா ரொம்ப அருமையா இருக்கு” என சொல்ல வந்தனா குறுக்கே பேசினாள்

   

”தாத்தா நானும் அதே சட்னிதானே செய்தேன் எனக்கு மட்டும் சொல்லலை அவளுக்கு மட்டும் சொல்றீங்க” என எதிர்த்து கேள்வி கேட்க

   

”நீ சட்னியை மிக்சியில அரைச்ச ஆனா இந்த சட்னி அம்மியில அரைச்சதால ருசியா இருக்கு நீயும் சாப்பிட்டு பாரு உனக்கே வித்தியாசம் தெரியும்” என சொல்லவும் நந்தினி மற்றவர்களுக்கு பரிமாறினாள். 

   

வந்தனா தான் செய்த சட்னியையும் நந்தினி செய்த சட்னியையும் சாப்பிட்டு பார்த்து ஒப்பிட்டாள். அதில் நந்தினி செய்த சட்னி வாசமாகவும் நல்ல ருசியாகவும் இருக்கவே அவள் கோபமாக நந்தினியை பார்த்து முறைக்க அதைக்கவனித்த தாத்தா வந்தனாவிடம்

   

”ம்ஹூம் இது தப்பு வந்தனா இப்படி நீ முறைக்கறது தப்பு”

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.