“இல்லை இப்ப மணி 10 இந்த நாளோட போட்டி முடிஞ்சிடுச்சி இது நான் சும்மா செய்றேன் தினமும் பால் குடிச்சிட்டு தூங்கியே பழக்கம் எனக்கு” என சொல்லவும் அவளும் அந்த பால் டம்ளர்களை பார்த்தாள். அதில் நட்ஸ்பால் இருக்கவே அதை எடுக்க சென்றவளை தடுத்தாள்
”இல்லை வந்தனா அதை எடுக்காத அது அத்தானுக்காக ஸ்பெஷலா நான் செஞ்சது”
“அதென்ன அவருக்காக மட்டும் தனியா செய்றது இப்படியெல்லாம் நீ செஞ்சி அவரை வசியம் பண்ணப்பார்க்கறியா”
”அவசியம் இல்லை இது என்னோட அன்பிற்கான வெளிப்பாடு அவ்ளோதான் உனக்கு அவர் வேணும்னா நீயும் செஞ்சிக்க என்னை செய்யக்கூடாதுன்னு யாரும் சொல்லலை உன்னை செய்யாதன்னு சொல்லவும் இல்லை. எல்லாமே நம்ம விருப்பம்தான் இப்ப வழியை விடு” என சொல்லிவிட்டு அவள் சென்றுவிட அவள் பின்னாடியே சென்று நடப்பதைப்பார்த்தாள்.
நேராக அவள் பால் டம்ளர்களுடன் வர தினகரன் ஆசையாக ஓடிவந்து வேண்டுமென்றே நட்ஸ் பால் டம்ளரை கையில் எடுத்தான். அதைப்பார்த்து கத்தினான் ரிஷி
”டேய் அது எனக்குடா”
“இன்னிக்கு ஒரு நாள் நான் குடிச்சிக்கிறேன் எப்படியிருக்குன்னு பார்க்கறேன்” என சொல்லவும் சுசித்ரா வந்து அவனது முதுகில் ஒரு அடி போட்டு டம்ளரை பிடுங்கி ரிஷியிடம் தந்தாள்.
”அம்மா“
“சும்மாயிருடா இது வெறும் பால்டம்ளர் கிடையாது. இது நந்தினியோட அன்பு. அவளோட அன்பை நீ எதுக்கு அடைய பார்க்கற உனக்கு வேணும்னா அவள்ட்ட எப்படி செய்றதுன்னு கேட்டுக்கிட்டு அப்படி செஞ்சி சாப்பிட்டுக்க அடுத்தவங்களோட அன்பை இப்படி பிடிவாதமா பிடுங்காத இந்தா பாதாம் பால் குடிச்சிட்டு போய் தூங்கு வேலைக்கு போகாம வீட்லயே தண்டமா இருக்க வேண்டியது இப்படி எதையாவது செய்து பிரச்சனை உண்டு பண்றது”