“தாத்தா” என வந்தனா கேள்வியுடன் பார்க்க
”நீ 5 வகையான தோசைகளை செஞ்ச அது நல்லாயிருக்குன்னு சொன்னேன். அதே மாதிரிதான் நந்தினிக்கும் அவள் செய்ற சட்னி நல்லாயிருக்குன்னு சொன்னேன். யாரையும் நான் பாரபட்சம் பார்க்கலை. ஒருத்தருக்கே நான் பாராட்டு மழை பொழியலை சரியா. இதுக்காக நீ நந்தினி மேல கோபப்படவேணாம் உன் திறமையை நீ காட்டு
இன்னும் 29 நாள் இருக்கு இந்த 2 நாளைக்கே நீ மத்தவங்களோட போட்டி போடலாம் ஆனா அடுத்தவங்க மேல பொறாமையோ வெறுப்போ காட்ட கூடாது. இன்னிக்கு அவள் கலக்கினா நாளைக்கு நீ கலக்கு மார்க்கெல்லாம் மாறி மாறிதான் நான் போடுவேன் சரியா இப்ப அமைதியா சாப்பிடும்மா” என சொல்லவும் வந்தனாவும் எதையோ நினைத்து தனக்குள் தானே சிரித்துவிட்டு சாப்பிட்டு முடித்தாள்.
அனைவரும் சாப்பிட்டு எழுந்ததும் நந்தினி வழக்கம் போல் பால் காய்ச்ச சென்றாள். உறங்க சென்ற வந்தனா நந்தினி அறையில் இல்லாமல் போனதை கண்டு அவசரமாக கீழே வந்து தேடினாள். எங்கும் இல்லாமல் போக நேராக கிச்சன் பக்கம் வருவதற்குள் கிச்சனிலிருந்து வெளியே வந்த நந்தினியை பார்த்தாள் அவள் கையில் இருந்த டிரேயில் பால் டம்ளர்கள் இருக்கவே சந்தேகத்துடன்
”ஆமா இதெல்லாம் யாருக்காக”
“எல்லாருக்கும்தான் உனக்கு வேணும்னா கூட எடுத்துக்கலாம்”
“இதுவும் போட்டியில ஒரு பகுதியா”
”இல்லை பால் மிச்சமாயிருக்கு என்ன செய்றதுன்னு கேட்டேன் தாத்தா தான் பால் கொண்டாம்மா குடிச்சிட்டு தூங்கலாம்னு சொன்னாரு அதான்”
”ஓ அப்படியா இதுக்கும் மார்க் இருக்கா”