தாத்தாவும்
”இதுதான் போட்டி மதியம் நந்தினி 5 வகையா சாதம் செஞ்சதால அதை மனசுல வைச்சக்கிட்டு இப்ப நீ 5 வகையா தோசை செஞ்சது நல்லாயிருக்கு. இப்படித்தான் போட்டி போடனும் யாருக்காகவும் விட்டுக்கொடுக்காம நடந்துக்கனும். சபாஷ் இப்பதான் நீ போட்டி போடவே ஆரம்பிச்சிருக்க. மத்தவங்களுக்கு இது போட்டியாவே தெரியலைன்னாலும் உனக்காவது தெரிஞ்சிருக்கே” என சொல்லிவிட்டு மற்ற பெண்களை பார்த்தார்
”சோனா, மிருதுளா, நந்தினி பார்த்துக்குங்க வந்தனா எப்படி போட்டி போடறாள்னு இப்படிதான் இருக்கனும் .இந்த போட்டி பொறாமையால வந்தது கிடையாது. தன்னாலயும் இந்த மாதிரி செய்ய முடியும்னு காட்டதான் புரியுதா உங்களுக்கு இனிமே நீங்களும் போட்டியை போட்டியா நினைங்க என்னவோ டூரிஸ்ட் ப்ளேஸ்க்கு வந்தது போல ஜாலியா இருந்துட்டு போகலாம்னு நினைக்காதீங்க அப்புறம் போட்டியில தோத்துடுவீங்க
நாளையிலிருந்து சமையல் மட்டும் இல்லை அதையும் கடந்து நிறைய பிரச்சனைகள் வரும் அதையெல்லாம் நீங்கதான் சமாளிக்கனும். வெறுமே இப்படி சமையல் செய்றதால உங்களுக்கு மார்க் போட்டு தேர்ந்தெடுக்க நான் கூப்பிடலை. சமையல்ங்கறது இந்த போட்டியில ஒரு பகுதிதான் புரியுதா” என சொல்லவும் அவர்களும் தலையை ஆட்டவும் வந்தனா மற்றவர்களுக்கு பரிமாறிவிட்டு அமர்ந்துக்கொண்டாள்.
அடுத்து மிருதுளா வந்தாள்.
அவள் பாவ் பாஜி செய்திருந்தாள்.
”என்னம்மா இது ஸ்நேக்ஸ் ஐட்டம் எல்லாம் செஞ்சிருக்க இது ஒரு டிஷ்ஷா”
“தாத்தா சோனா சான்ட்விச் செஞ்சா அதுவும் ஒரு ஸ்நேக் ஐட்டம்தானே தாத்தா”
“இருந்தாலும் அதுல நிறைய விசயங்கள் இருந்திச்சே காய்கறிகள் பன்னீர் சீஸ் வெண்ணைன்னு இருந்திச்சி. அதை நான் ஸ்நேக்ஸ் ஐட்டமா நினைக்கலையே இந்த பாவ் பாஜியில என்ன இருக்கு பன்னும் உருளைக்கிழங்கு கறியும்தான் இருக்கு”