தாத்தா நந்தினியிடம்
”சரி வாம்மா நீயும் என் கூட வாக்கிங் பண்ணு வா எனக்கு சப்போர்ட் நீதான்” என அவளை அழைத்துக்கொண்டு அந்த வீட்டை ஒரு 3 முறை ரவுண்டு சுற்றி வந்தார்கள் இருவரும். நடக்கும் போதே இந்த வீட்டின் பெருமையை பற்றி அவள் கேட்ட கேள்விகளுக்கு பதிலும் சொல்லிக்கொண்டு வந்தார்.
நடந்து நடந்து கால் வலிக்க அவர் வீட்டுக்குள் நுழைந்து சோபாவில் அமர்ந்துக்கொண்டார். அங்கு ரிஷி அவரை பார்த்து சிரித்தான். நந்தினி டீ போட சென்றுவிட்டாள்.
”எதுக்குடா சிரிக்கறா”
“இந்த வயசுல இது தேவையா அழகா என்னை நந்தினிக்கு கட்டிவைச்சிட வேண்டியதுதானே”
“எதை எப்ப எப்படி செய்யனும்னு எனக்கு நல்லாவே தெரியும் நீ பேசாம இரு”
“ஆமா இப்படியே 30 நாளும் சமையல் மட்டுமேதான் செய்யச் சொல்லப் போறீங்களா வெறும் சமையல் செய்றதாலயே ஒரு மருமகளை தேர்ந்தெடுத்திட முடியுமா தாத்தா”
”சமையல் செய்ய சொன்னது அந்த பொண்ணுங்களோட திறமை, சகிப்புத்தன்மை, பாசம், அன்பு, அனுசரிச்சி போறது இதையெல்லாம் பார்க்கறதுக்குதான். நேத்து 4 பேரும் சரியா செய்யலை ஆனா இன்னிக்கு சரியா ஓரளவுக்கு என் பேச்சை கேட்டு நடந்துக்கிறாங்க. இந்த மாசம் முழுக்க அவங்கதான் இந்த வீட்ல சமையல் செய்யனும் அதுக்காக இது மட்டுமே போட்டி கிடையாது. போட்டிங்கறது வேற நாளைக்கு பாரு என்ன நடக்குதுன்னு”
“நாளைக்கா அப்ப அடுத்த நாளுக்கு தனியா யோசிப்பீங்களா தாத்தா”
“அதுவும் சரிதான் என்ன செய்யலாம்” என யோசிக்க ஆரம்பித்தார். அந்நேரம் நந்தினியும் அனைவருக்கும் டீ போட்டு கொண்டு வந்து தந்தாள்.